மலேசியா மற்றும் பல நாடுகளில் சமீபத்திய கோவிட் -19 நேர்வுகள்

இன்று காலை 10 மணி நிலவரப்படி, மலேசியாவிலும் உலகின் பல நாடுகளிலும் கோவிட் -19 பற்றிய சமீபத்திய தகவல்கள் இங்கே.

ஜான் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மைய (John Hopkins Coronavirus Resource Center) தரவுகளின் அடிப்படையில், 178,424,674 கோவிட் -19 நேர்வுகளும் 3,864,442 இறப்புகளும் இதிவரை பதிவாகியுள்ளன.

உலகெங்கிலும் மொத்தம் 2,600,035,128 மருந்தளவு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையிலான நேர்மறை வழக்குகளையும் இறப்புகளையும் பதிவு செய்த நாடுகளில் முதலிடத்தில் உள்ளன, சனிக்கிழமையன்று அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 500,000-ஐத் தாண்டியுள்ளது.

இருப்பினும், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல நாடுகளில் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் புதிய நேர்வுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மலேசியா இதுவரை 5,815,575 மருந்தளவு தடுப்பூசிகளை 140,573 சனிக்கிழமை வரை வழங்கியுள்ளது. மொத்த மக்களில் 4,202,601 பேர் முதல் மருந்தளவையும் 1,612,974 பேர் இரண்டாவது மருந்தளவையும் பெற்றுள்ளனர்.

கீழேயுள்ள அட்டவணை, மலேசியா உள்ளிட்ட பல ஆசியான் நாடுகளின் நிலையை ஜூன் 20 வரையிலான நிலவரத்தைக் காட்டுகிறது, தொற்றுநோய் இன்னும் பரவிவரும் நிலையில், தடுப்பூசி செயல்முறை முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த அட்டவணை, உலகச் சுகாதார நிறுவனம், ஆசியான் நாடுகள், நமது உலகம் (Our World) மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையம் ஆகியவற்றின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.

  • பெர்னாமா