எம்.ஆர்.என்.ஏவைப் பயன்படுத்தி மலேசியா கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கி வருகிறது

எம்.ஆர்.என்.ஏ. (ரிபோநியூக்ளிக் அசிட் மெசஞ்சர்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மலேசியா கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கி வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.

இந்தத் தடுப்பூசி, முதன்முதலில் 2020 நவம்பரில் சுகாதார அமைச்சு மற்றும் மலேசியப் புத்ரா பல்கலைக்கழகம் (யுபிஎம்) ஆகியவற்றின் கீழ் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐஎம்ஆர்) உருவாக்கியது என்றார் அவர்.

“SARS-CoV-2 வைரஸ் மற்றும் பிற வகை வைரஸ்களை உள்ளடக்கிய குளோனிங் கட்டத்தில் தற்போதைய நிலை உள்ளது,” என்று அவர் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீனுடன், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் (பிக்) குறித்து, இன்று புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேம்பாட்டு செயல்முறை முடிந்ததும், சிறிய மற்றும் பெரிய விலங்குகள் மீது தடுப்பூசியின் செயல்திறன் குறித்த முன்கூட்டிய ஆய்வுகள் நடத்தப்படும். தடுப்பூசி பதிவு மற்றும் உற்பத்தி செயல்முறைக்கு முன்னதாக ஒன்று முதல் மூன்று மனித மருத்துவ ஆய்வுகளும் நடத்தப்பட வேண்டும் என்று டாக்டர் ஆதாம் கூறினார்.

ஒரே ஒரு வழக்கு

இரண்டு மருந்தளவு தடுப்பூசிகளை முடித்த பின்னரும், கோவிட் -19 தொற்றினால் மீண்டும் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் குறித்து கேட்டபோது, 1,480 பேர் மீண்டும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் நான்காம் கட்டத்தில் ஒரே ஒரு வழக்கு மட்டுமே கண்டறியப்பட்டது, அது நிமோனியாவினால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் தேவைப்படும் அறிகுறிகளைக் கொண்டுள்ளது என்றார் டாக்டர் ஆதாம்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், ஒன்று மற்றும் இரண்டாம் கட்டங்களில் கண்டறியப்பட்டனர், அதாவது அறிகுறியற்ற மற்றும் அறிகுறியோடு நிமோனியா இல்லாமல் என அவர் கூறினார்.

“நோய்த்தொற்றுடைய எவரையும், கடுமையாக பாதிப்புறாமல் பாதுகாக்க தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என்பதையே இது காட்டுகிறது. தடுப்பூசி திட்டம் நல்ல மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என்று இதுவரை கண்காணிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் தரவு காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கோவிட் -19 தொற்றின் புதிய வகைகள் மரபணு கண்காணிப்பு மூலம் 183 எனக் கண்டறியப்பட்டன, அதாவது 167 வேரியண்ட்ஸ் ஆஃப் கன்சர்ன் (விஓசி) மற்றும் 16 வேரியண்ட்ஸ் ஆஃப் நீட் எட்டென்ஷன் (விஓஐ).

“எனவே, அடுத்த மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து மரபணு கண்காணிப்பை மேற்கொள்வோம்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா