முழுமையாக கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக அம்பாங் மருத்துவமனை

சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.எஸ்.), அம்பாங் மருத்துவமனையை ஹைப்ரிட் கோவிட்19-இலிருந்து, முழு கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக, நேற்று (ஜூன் 23) முதல் மாற்ற முடிவு செய்துள்ளது.

சிலாங்கூர் மாநிலச் சுகாதார இயக்குநர் டாக்டர் ஷாரி ங்காடிமன் கூறுகையில், கோவிட்-19 நேர்வுகளின் தினசரி அதிகரிப்பு காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, குறிப்பாக மத்திய பிராந்திய மண்டலத்தில் தொடர்ந்து மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட கட்டத்திலான நோயாளிகளின் எண்ணிக்கையை அது உள்ளடக்கியது.

“இந்த நிலைமை மத்தியப் பிராந்திய மண்டல மருத்துவமனைகளில், சராசரி படுக்கை பயன்பாடு அதிகபட்ச விகிதத்தை விட அதிகமாக உள்ளது, இதனால் MAEPS 2.0 ஒருங்கிணைந்த கோவிட்-19 குறைந்த ஆபத்து தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையம் (PKRC) மேலும் சிகிச்சை தேவைப்படும் கோவி-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகிறது.

“சிலாங்கூரில் முழு கோவிட் -19 மருத்துவமனைகளாக இப்போது இரண்டு மருத்துவமனைகள் இயங்குகின்றன, அதாவது சுங்கை பூலோ மருத்துவமனை மற்றும் அம்பாங் மருத்துவமனை,” என்று அவர் தெரிவித்தார்.

கோவிட் -19 நோயாளி அல்லாதவர்களின் சிகிச்சை மற்றும் பிற வசதிகளை, அம்பாங் மருத்துவமனை புதன்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் என்று டாக்டர் ஷாரி கூறினார்.

  • பெர்னாமா