15.1 விழுக்காட்டினர் 2 மருந்தளவு தடுப்பூசிகளை நிறைவு செய்தனர்

நேற்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் 15,517,866 மருந்தளவுகள் கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.

நேற்று இரவு 11.59 வரையில், மொத்தம் 446,052 மருந்தளவு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதில் முதல் ஊசியை 282,980 பேரும், இரண்டாவது மருந்தளவை 163,072 பேரும் பெற்றனர் என்று தனது கீச்சகம் வாயிலாக அவர் தெரிவித்தார்.

“அப்புதிய வளர்ச்சியானது, இரண்டு மருந்தளவு தடுப்பூசிகளுடன் 4,932,981 பேர் முழுமையான தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், இது நாட்டின் மக்கள் தொகையில் 15.1 விழுக்காடாகும்,” என்று அவர் கூறினார்.

பெரியவர்களில், இரண்டு மருந்தளவு தடுப்பூசிகளை நிறைவு செய்து, 68 விழுக்காட்டுடன் லாபுவான் முன்னிலையில் உள்ளது, அதைத் தொடர்ந்து சரவாக் (49.4 விழுக்காடு), பெர்லிஸ் (36.5 விழுக்காடு), கிள்ளான் பள்ளத்தாக்கு (22.7 விழுக்காடு) மற்றும் நெகிரி செம்பிலான் (21.8 விழுக்காடு) ஆகியவை உள்ளன.

  • பெர்னாமா