13,034 புதிய நேர்வுகள், 134 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 13,034 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில், 134 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன.  இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 7,574 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 8,436 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 938 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 459 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

வகை அடிப்படையில் முறிவு

வகை 5 – (மோசமான நிலை, சுவாசக் கருவியின் உதவி தேவை) : 13 நேர்வுகள் (0.1%)

வகை 4 – (உயிர்வளி உதவி தேவை) : 72 நேர்வுகள் (0.5%)

வகை 3 – (நிமோனியா) : 124 நேர்வுகள் (1.0%)

வகை 2 – (இலேசான அறிகுறிகள்) : 5,646 நேர்வுகள் (43.3%)

வகை 1 – (அறிகுறிகள் இல்லை) : 7,179 நேர்வுகள் (66.1%)

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (6,049), கோலாலம்பூர் (1,611), ஜொகூர் (791), நெகிரி செம்பிலான் (711), கெடா (701), சரவாக் (644), சபா (497), திரெங்கானு (391), பினாங்கு (371), மலாக்கா (353), பேராக் (284), பஹாங் (261), கிளந்தான் (240), புத்ராஜெயா (100), லாபுவான் (24), பெர்லிஸ் (6).

மேலும் இன்று, 32 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 21 பணியிடத் திரளைகள் ஆகும்.