சிலாங்கூர் தமிழ்ச்சங்கம் – கோவிட்-19-ஆல் மரணமடைந்தவர்களின் தகனத்திற்கு உதவிக்கரம் நீட்டுகிறது

கோவிட்டின் பெருந்தொற்றால் மரணமடைந்த நபர்களின் மின்மடலைத் தகன செலவினங்களுக்கு உதவ சிலாங்கூர் தமிழ்ச்சங்கம் முன்வந்துள்ளது. அன்மையைக் காலங்களில் அதிகமான நபர்கள் மரணமடைந்ததை தொடர்ந்து, கிள்ளான்  பொது மருத்துவமனையில் மரணமடைந்தவர்களின் பிரேதங்கள் பல இன்னமும் தகனம் செய்யப்படாத நிலையில் உள்ளதாக  சிலாங்கூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் இலா. சேகரன் கூறுகிறார்.

“இந்த தகனம் செய்யும் பொறுப்பை சிலாங்கூர் அரசாங்கம் எடுத்துச் செய்கிறது. ஒரு நாளைக்கு அவர்களால் 10 முதல் 12 பிரேதங்களைத் தகனம் செய்ய இயலும். ஆகவே, பாதிப்படைந்த குடும்பத்தினர்கள் விரைவாக உடனடியாக தகனம் செய்ய வேண்டுமானால், அவர்கள் தனியார் சேவையை நாட வேண்டியுள்ளது” என்கிறார் சேகரன்.

தனியார் தகனம் செய்யும் சேவையானது சுமார் ரிம 2,000-க்கும் அதிகமாக இருக்கும்.  பிரேதப்பெட்டி, போக்குவரத்து, மின் சுடலைக்கட்டணம் இப்படி சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி கட்டணங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

வறுமையிலும் இக்கட்டான சூழலில் உள்ளவர்கள், உடனடியாக இறுதிச் சடங்குகள்  கூடச் செய்ய இயலாத சூழலில் சிக்கித் தவிக்கின்றனர் என்கிறார் சேகரன்.

இது போன்ற சூழலில் உள்ளவர்களுக்கு உதவும் பொருட்டுதான் இந்த உதவிக்கரத்தை வழங்க முன்வந்தோம் என்கிறார் இந்த சங்கத்தின் துணைத்தலைவர் இராமச்சந்திரன்.

இந்த உதவியானது கிள்ளான், காப்பார் மற்றும் மேரு வட்டாரங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே கிட்டும். குறிப்பாக வறுமையில் இருக்கும் தமிழர்களின் இறுதிச்சடங்குகள்,  பணமில்லை என்பதால் மேலும் அல்லல் பட்டு அவதிப்படாமல், நடைபெற தங்களால் இயன்றதை முன்வந்ததாக சேகரன் கூறினார்.

மேலும் தகவல் பெறுவதற்கு சேகரன் 016 251 0752 அல்லது இராமச்சந்திரன் 012 317 1625 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளவும்.