உருமாறும் கொரோனாவால் 3வது பூஸ்டர் டோஸ் தேவையா? டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பேட்டி

உருமாறும் கொரோனாவால் 3வது பூஸ்டர் டோஸ் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட கூடும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் கூறியுள்ளார்.

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா 2வது அலை முதல் அலையை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.  கடந்த சில வாரங்களாக பாதிப்புகள் குறைந்து மெல்ல கட்டுக்குள் வருகின்றன.

இந்த நிலையை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.  எனினும், தொடர்ந்து புதிது புதிதாக உருமாறிய கொரோனா தோன்றுவது அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

இதனால், பிரிட்டன் போன்ற நாடுகள் பொதுமக்களுக்கு 3வது பூஸ்டர் டோஸ் அளிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.  இந்நிலையில், கொரோனா பூஸ்டர் டோஸ் பற்றி டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் நோயெதிர்ப்பு சக்தி குறையும்போது, பூஸ்டர் டோஸ் நமக்கு தேவை.

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறையும் போது அதனை, பூஸ்டர் டோஸ் மூலம் ஈடு செய்து கொள்ளலாம்.  நாட்டிலுள்ள அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின், பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்கப்படும்.  இந்த ஆண்டு இறுதிக்குள் பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கும் வாய்ப்புகள் அதிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

dailythanthi