ராமசாமி: “நான் வான்குடை வழி வந்த அரசியல்வாதி அல்ல”

டிஏபி கட்சிக்குத் தாம் அண்மையில் வந்தவர் எனக் கூறப்படுவதை பினாங்கு டிஏபி துணைத் தலைவர் பி ராமசாமி மறுத்துள்ளார். 1981ம் ஆண்டு தொடக்கம் தாம் கல்வியாளராக பணியாற்றிய காலத்திலிருந்து கட்சியில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

பல்கலைக்கழக விரிவுரையாளராக தாம் வேலை செய்த காலத்தில் வி டேவிட், பி பட்டு போன்ற மூத்த டிஏபி தலைவர்களுடன் தாம் பணியாற்றியுள்ளதாக பினாங்கு மாநில இரண்டாவது துணை அமைச்சருமான ராமசாமி தெரிவித்தார்.

தமது அரசியல் ஈடுபாடு காரணமாக வேலையிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாம் டிஏபி-யில் இறுதியாக சேர்ந்ததாக அவர் மேலும் கூறினார்.

“பினாங்கிற்கு வருவதற்கு முன்னர் நான் வான்குடை வழியாக டிஏபி-க்குள் வரவில்லை,” என புன்னகையுடன் ராமசாமி தெரிவித்தார்.

அண்மைய டிஏபி மாநில மாநாட்டில் “யார் அந்த ராமசாமி” என டிஏபி தேசியத் தலைவர் கர்பால்சிங் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

“அந்தப் பல்கலைக்கழகத்தில் என்னைத் தவிர டிஏபி-யில் யாரும் இல்லை. அவ்வாறு இருப்பதாகக் கண்டு பிடிக்கப்படுகின்றவர்கள் நீக்கப்படும் சாத்தியம் இருந்தது. எனக்கு பத்து எச்சரிக்கைக் கடிதங்கள் கொடுக்கப்பட்டன. லிம் குவான் எங்-குடன் சொற்பொழிவு ஒன்றுக்கு ஏற்பாடு செய்ததற்காக கல்வி அமைச்சர் எனக்கு காரணம் கோரும் கடிதத்தை அனுப்பினார்”, என ராமசாமி மேலும் தெரிவித்தார்.

கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ள ராமசாமி, நேற்று பினாங்கில் மாநில டிஏபி மாநாட்டில் பேராளர்களிடம் பேசினார்.

ஒழுங்கு நடவடிக்கை வாரியம் தம்மைக் குற்றவாளி எனக் கண்டு பிடித்து, பதவி விலகுமாறு மத்திய நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டால் விலகுவதற்குத் தாம் தயார் என்றும் அவர் அறிவித்தார்.

ஞானாசிரியர் கருத்து மீது தாம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கர்பால் பகிரங்கமக நேற்று மாநாட்டில் கோரியது பற்றி அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

ராமசாமி தமது சேவகர்களுக்கு தொகுதிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்ததற்காக அவரை ஜமீன்தார் ( Warlord) என கர்பால் அழைத்ததற்கு பதில் கொடுக்கும் வகையில் ராமசாமி அந்தக் கருத்தை வெளியிட்டார். ஆனால் அதனை ராமசாமி கடுமையாக மறுத்துள்ளார்.

TAGS: