அதிக அளவில் உற்பத்தி- அடுத்த மாதம் 24 கோடி தடுப்பூசி போடப்படுகிறது

புதுடெல்லி:

இந்தியாவில் தற்போது இந்திய தயாரிப்புகளான கோவிஷீல்டு, கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகள் அதிகமாக போடப்பட்டு வருகின்றன.

இதுதவிர ரஷியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இத்துடன் அமெரிக்காவின் ஜான்சன் அன்ட் ஜான்சன், மாடர்னா ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தம் 5 தடுப்பூசிகள் தற்போது அனுமதி பெற்று இருக்கின்றன. 6-வதாக சைகோவ்-டி மருந்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது அக்டோபர் மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது.

தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் மருந்துகள் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு நிறுவனம் அடுத்த மாதம் (செப்டம்பர்) மட்டும் 20 கோடி டோஸ் மருந்து வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள மருந்துகளுடன் சேர்த்து அடுத்த மாதம் மட்டும் இந்தியாவில் 24 கோடி டோஸ் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளனர். தற்போது வரை 62 கோடி தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

அடுத்த மாதம் மிக அதிகமாக போட திட்டமிடப்பட்டு இருப்பதால் இந்தியாவில் ஊசி போடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும்.

 (நன்றி Maalaimalar)