தடுப்பூசி போட்டவர்களை ‘லம்டா’ மற்றும் ‘டெல்தா’ கோவிட் உருமாற்றம் (Variant) தாக்குமா?

கவிதா கருணாநிதி – 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள வுஹான் நகரத்தில் சார்ஸ் கோவ் 2 (SARS-COV-2) என்ற கிருமி முதலில் தோன்றப்பட்டு உலகம் முழுவதும் காட்டுத் தீப் போலப் பரவிக் கோரோனா வைரஸ் டிசிஸ் (கோவிட் 19) உருவாக்கத்திற்கு அடித்தளமாக அமைகின்றது.

கோவிட் உலகளவில் 217 மில்லியன் மக்களைப் பாதித்தது மட்டுமல்லாமல் 4.56 மில்லியன் மக்களின் இறப்பிற்கும் காரணமாக அமைகின்றது. கோவிட்டால் மக்கள் அவதிப்படுவதைத் தடுப்பதற்குத் தடுப்பூசி மிகவும் அவசியமாகும். பல வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் பட்டாலும் சார்ஸ் கோவ் 2 ஸ்பைக் வெரியன்ட் (SARS-COV-2 spike variants) அதாவது உருமாற்றமுடையும்  கோவிட் வைரஸ் டதிகரித்துக் கொண்டே இருப்பதால் தடுப்பூசியின் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.

சீனாவில் தோன்றிய சார்ஸ் கோவ் 2 முதன்முதலில் தோன்றிய சார்ஸ் கோவ் 1 யை விட ஆறு மடங்கு செயல்திறனைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றன. அதே போல், சார்ஸ் கோவ் 2 தனித்துவமான உருவமைப்பைக் கொண்டிருப்பதால் பரவும் பொழுது இன்னும் ஆபத்தான வகையில் வைரஸ் உருமாறி  இந்தியாவில்  டெல்தா உருமாற்றமும் (Delta variant) வட அமெரிக்காவில் லம்டா உருமாற்றமும்(Lambda variant) உருவானதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விரண்டு வகை உருமாற்றமும் தடுப்பூசி போட்டிருந்தாலும் அவர்களைப் பாதிக்கின்றது.

கோவிட் 19 யை  முடிவிற்குக் கொண்டுவரக்  கோவிட் வைரஸின் உருமாற்றத்தைப் பற்றி நாம் இன்னும் விவரமாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். சீனா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆய்வாளர்கள் டெல்தா மற்றும் லம்டா உருமாற்றத்தின் தன்மைகளைக் குறித்தது மட்டுமின்றிப் பின்னர் அதிக ஆபத்தான நிலையில் பரவக்கூடும் என்றும் பையோ.ஆர்.சிவ் (bioRxiv) யில் வெளியிட்டார்கள்.

தற்போது வெளிவந்த ஆராய்ச்சியில் பைசர் (Pfizer) தடுப்பூசி டெல்தா உருமாற்றத்தைக் எதிர்க்கக்கூடும் என்றும் லம்டா உருமாற்றத்தை குறைவாகத் தடுக்கக்கூடும் என்றும் குறிப்பிடுகிறது. இதன் காரணம் ஆறு மாதத்தில் பைசர் தடுப்பூசி போடப்பட்டவர்கள் உடம்பில் அன்டிபோடிஸ்(Antibodies) குறைந்து காணப்படுகின்றது என்று ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, மூன்றாவது பூஸ்டர் ஷெட்டும் (booster shot) அவசியம் என்ற கூறப்படுகிறது.

இருந்தாலும், அமெரிக்காவில் 90% தடுப்பூசி போடாதவர்களைத்தான் டெல்தா உருமாற்றம் தாக்கியுள்ளது. எனவே, தடுப்பூசி போடுவதால் நாம் கோவிட் உருமாற்றத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

எனவே, கோவிட் உருமாற்றங்கள் உங்களைத் தாக்குவதற்குள் தடுப்பூசியைப் போட்டு உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.