நாளை பதவியேற்பு? தலிபான் திட்டம்!

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான், தற்காலிக அரசையும் சமீபத்தில் அறிவித்தது. அமெரிக்காவில் 2001, செப்., 11ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன் 20வது ஆண்டு அனுசரிக்கப்பட உள்ளது.அதே நாளில் புதிய அரசு பதவியேற்பு விழாவை நடத்த, தலிபான்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தலிபான் மூத்த தலைவர்கள் கூறியுள்ளதாவது:அமெரிக்காவுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதற்காக இந்த நாளை தேர்ந்தெடுக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை அது மிக முக்கியமான நாள்.பிரதமராக பதவியேற்க உள்ள முல்லா முகமது ஹசன் அகுந்த் மற்றும் பல அமைச்சர்களின் பெயர், அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளது எங்களுக்கு தர்மசங்கடமாக உள்ளது.

அதேபோல ஹக்கானி அமைப்பும் அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் உள்ளது.தோஹாவில் செய்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா, இவர்களது பெயர்களை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.பதவியேற்பு விழாவுக்கு சீனா, கத்தார், ரஷ்யா, ஈரான், துருக்கி போன்ற நாடுகளை அழைக்கவும் தலிபான்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

(நன்றி  Dinamalar)