“ஞானாசிரியர்-ஜமீன்தார்” மோதலை டிஏபி மத்திய நிர்வாகக் குழு இன்று விவாதிக்கிறது

“ஞானாசிரியர்-ஜமீன்தார்” விவகாரம் தொடர்பில் டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்-கிற்கும் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளர் பி ராமசாமிக்கும் இடையில் நிகழ்கின்ற வாக்குவாதம் பற்றி அந்தக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு இன்று விவாதிக்கிறது.

நிர்வாகக் குழுவின் கூட்டம் இன்றிரவு டிஏபி தலைமையகத்தில் நிகழும் என கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் தான் செங் கியாவ் கூறினார். குழு அந்தப் பிரச்னையை விவாதிப்பதோடு சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் நிலவும் வேறுபாடுகளைத் தீர்க்கவும் முயற்சி செய்யும் எனவும் அவர் சொன்னார்.

டிஏபி-யில் ‘ஞானாசிரியர்கள்” இருப்பதாக பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சருமான ராமசாமி கூறியதாக சொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பினாங்கு டிஏபி மாநாட்டில் அவ்விரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொண்டனர்.

என்றாலும் அவர்களுக்கு எதிராக ஏதாவது ஒரு வகையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் சாத்தியத்தை அந்தக் கூட்டம் ஆராயுமா என்ற கேள்விக்குப் பதில் அளிக்க தான் செங் கியாவ் மறுத்து விட்டார்.

பெர்னாமா

TAGS: