வானிலிருந்து மருந்து திட்டம்… தெலுங்கானாவில் ட்ரோன்கள் மூலம் தடுப்பூசி அனுப்பும் பணி தொடங்கியது

ஐதராபாத்:

தெலுங்கானாவில் மலைப் பகுதிகளுக்கும், கிராமப்புறங்களுக்கும், போக்குவரத்து நெரிசலை தவிர்த்து அவசரகால மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கும் மருந்து பொருட்களை ட்ரோன் மூலம் அனுப்பி வைக்கும் வானிலிருந்து மருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ட்ரோன் மூலமாக மருந்துகளை வழங்கும் திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, விகாராபாத் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.

தடுப்பூசிகள் நிரப்பப்பட்ட 5 கிலோ எடை கொண்ட பாக்ஸை தூக்கிய வண்ணம் பறக்க தொடங்கிய ட்ரோன், 10 நிமிடங்கள் பயணித்து 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அடைந்தது.

அப்போது பேசிய தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ், போக்குவரத்து நெரிசல் இடையூறு இல்லாமல் தடுப்பூசிகள், ரத்தம், அவசர மருத்துவ பொருட்களை ட்ரோன் மூலம் எளிதாக அனுப்பி வைக்கலாம் என்றார்.  தெலுங்கானாவில் படிப்படியாக இத்திட்டம் விஸ்தரிக்கப்படும் என்றும்  அவர் தெரிவித்தார்.

(நன்றி Maalaimalar)