புரிந்துணர்வு ஒப்பந்தம் : ‘பி.எச். எதிர்க்கட்சியாகவே உள்ளது’

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கூட்டணி எதிர்க்கட்சியாகவே இருக்கும், அடுத்த ஆண்டு ஜூலை 31-க்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்படாது.

நேற்று மதியம் கையெழுத்திடப்பட்ட வரலாற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (எம்.ஓ.யூ.) தொடர்ந்து, அரசாங்கத்திற்கும் பி.எச்.-க்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்களில் இந்த விஷயமும் இருந்தது என்று ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

“அரசாங்கத்திற்கும் பி.எச்.-க்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவுக்குப் பின்னர், பி.எச். தொடர்ந்து எதிரணியிலேயே உள்ளது. ஜூலை, 31 2022-க்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்படாது,” என்று பிகேஆர் தகவல் தொடர்பு இயக்குநர் கூறினார்.

மக்களுக்கான உதவி, கோவிட் -19, நாடாளுமன்றச் சீர்திருத்தம், 1963 மலேசிய ஒப்பந்தம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவற்றைக் கையாள்வதற்கான முயற்சிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கவனம் செலுத்துகிறது.

“ஆவணத்தின் முழுமையான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.