லங்காவியில் தோல்வியடைந்தால், இனி சுற்றுலா குமிழி இல்லை

மூத்த வெளியுறவு அமைச்சர் (பாதுகாப்பு திரளை) ஹிஷாமுடின் ஹுசைன், கெடா, லங்காவியில் தோல்வியடைந்தால், மற்ற இடங்களில் சுற்றுலா குமிழி முன்னோடி திட்டம் திறக்கப்படாது என்று கூறினார்.

முன்னோடி திட்டத்தின் வெற்றியை அளவிடும் முக்கிய அளவுகோல்கள், தேசிய மீட்சி திட்ட (பிபிஎன்) நிலைக்கு மாறுவதற்கான அளவுகோல்கள் போன்று, தீவிரச் சிகிச்சை பிரிவு (ஐசியு) படுக்கை பயன்பாட்டு விகிதம், கோவிட் -19 தொற்று விகிதம் மற்றும் தடுப்பூசி விகிதம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

லங்காவியில் முன்னோடி திட்டம் தோல்வியடைந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிருபரின் கேள்விக்குப் பதிலளித்த போது, ​​”சுற்றுலா குமிழியை மற்ற இடங்களுக்கு நாங்கள் திறக்க மாட்டோம்.

செப்டம்பர் 9-ம் தேதி, நாடு முழுவதும் உள்ள உள்ளூர் மக்கள் லங்காவிக்குச் செல்ல அனுமதி வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தது, கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து.

நாட்டின் வடக்கில் உள்ள சுற்றுலாத் தளமான லங்காவி தீவு, சுற்றுலா குமிழி முன்னோடி திட்டத்தின் முதல் இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது, இது கோவிட் -19 தடுப்பூசியின் முழு அளவை முடித்தவர்களுக்கு மட்டுமே.

எனவே, கலை மற்றும் கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சர் நான்சி சுக்ரி லங்காவியில் இதன் வெற்றியை நிரூபிக்க வேண்டும், அதன் பின்னரே அதனை மற்ற இடங்களுக்குத் தொடர முடியும் என்று ஹிஷாமுதீன் கூறினார்.

“அமைச்சர் நான்சிக்கு எனது செய்தி, லங்காவியில் (முன்னோடி திட்டம்) செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவும்,” என்று அவர் மூத்தப் பாதுகாப்பு அமைச்சருடன் இணைந்த சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் இன்று கூறினார்.

சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் அன்னுவார் மூசா மற்றும் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

லங்காவி 90 விழுக்காட்டிற்கு அதிகமான தடுப்பூசியை பதிவு செய்திருந்தாலும், சில குழுக்கள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று ஹிஷாமுடின் கூறினார்.

பேராக், பங்கோர் தீவு, நவம்பர் 1-ஆம் தேதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செப்டம்பர் 12-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், பேராக் வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் சுற்றுலா குழுத் தலைவர் நோலி ஆஷிலின் முகமது ராட்ஸி இந்த முடிவு தேசியப் பாதுகாப்பு மன்றத்திற்கு (எம்.கே.என்) உட்பட்டது என்றார்.