18,815 புதிய நேர்வுகள், கெடாவில் ஐசியு படுக்கைகளின் பயன்பாடு 105 %

சுகாதார அமைச்சு இன்று 18,815 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்து, மொத்த நேர்வுகளின் எண்ணிக்கையை 2,049,750 -ஆக பதிவு செய்துள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சரவாக் அதிகபட்ச தினசரி எண்ணிக்கையான 3,660 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது.

வழக்குகள், ஜோகூர் 2,206 வழக்குகள், சபா 1,982 வழக்குகள், பினாங்கு 1,777 வழக்குகள் மற்றும் கெடா 1,233 வழக்குகளுடன் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.

கெடாவில் தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) படுக்கைகளின் பயன்பாடு 105 விழுக்காடு, மொத்தம் 104 படுக்கைகளாகப் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், கோலாலம்பூரில் ஐசியு படுக்கை பயன்பாட்டு விகிதம் 98 விழுக்காடு, பினாங்கு 92 விழுக்காடு, கிளந்தானில் 94 விழுக்காடு மற்றும் திரெங்கானுவில் 90 விழுக்காடு எனப் பதிவாகியது.

செப்டம்பர் 16, 2021 நிலவரப்படி, கோவிட் -19 படுக்கை திறன் & பயன்பாடு, தடுப்பூசி மற்றும் புதிய நேர்வுகளின் தற்போதைய நிலை :-

1) கோவிட் -19 படுக்கை திறன் & பயன்பாடு (15 செப்டம்பர் 2021 வரை, மாலை 5 மணி வரை)

  • ஐசியு அல்லாத படுக்கை பயன்பாடு 71 விழுக்காடு
  • ஐசியு படுக்கை பயன்பாடு 81 விழுக்காடு

2) கோவிட் -19 தடுப்பூசி அளவின் ஒட்டுமொத்த விழுக்காடு (செப்டம்பர் 15, 2021, இரவு 11:59 வரை)

  • மொத்த மக்கள் தொகை – 1 மருந்தளவு 66.5 விழுக்காடு
  • மொத்த மக்கள் தொகை – முழுஅளவு 54.6 விழுக்காடு
  • பெரியவர்கள் – 1 மருந்தளவு 92.5 விழுக்காடு
  • பெரியவர்கள் – 76.2 விழுக்காடு

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சரவாக் (3,660), சிலாங்கூர் (2,718), ஜொகூர் (2,206), சபா (1,982), பினாங்கு (1,777), பேராக் (1,446), கெடா (1,233), கிளந்தான் (1,222), திரெங்கானு (814), பகாங் (712), கோலாலம்பூர் (493), மலாக்கா (269), நெகிரி செம்பிலான் (170), பெர்லிஸ் (80), புத்ராஜெயா (22), லாபுவான் (11).