கோவிட் -19 : 15,549 புதிய நேர்வுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் 2,408

இன்று 15,549 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நான்காவது நாளாக, சரவாக் (2,929) உடன் ஒப்பிடும்போது, கிள்ளான் பள்ளத்தாக்கில் தினசரி புதிய வழக்குகளின் எண்ணிக்கை (2,408) குறைவாகவே உள்ளது.

தீவிரச் சிகிச்சை பிரிவிலும் (ஐசியு), சுவாசக் கருவியின் உதவி தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

தற்போது ஐசியுவில் 1,165 நோயாளிகள் இருக்கிறார்கள், அவர்களில் 888 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது; 277 பேர் சந்தேகத்திற்குரியவர்கள் பட்டியலில் இருக்கின்றனர். 689 நோயாளிகளுக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைபடுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சரவாக் (2,929), ஜொகூர் (2,208), சிலாங்கூர் (1,995), சபா (1,395), பினாங்கு (1,375), கிளந்தான் (1,214), பேராக் (1,120), கெடா (1,073), திரெங்கானு (755), பகாங் (634), கோலாலம்பூர் (382), மலாக்கா (263), நெகிரி செம்பிலான் (131), பெர்லிஸ் (33), புத்ராஜெயா (31), லாபுவான் (11).

5,263 திரளைகளில், 1,364 திரளைகள் இன்னும் செயலில் உள்ளன. இன்று பதிவாகியுள்ள 16 புதிய திரளைகளும் இதில் அடங்கும்.