அரசு-பிஎச் புரிந்துணர்வு ஒப்பந்தம் : பெஜுவாங் அழைக்கப்படவில்லை – டாக்டர் எம்

அரசாங்கம் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஒயு) பற்றி விவாதிக்க பெஜுவாங் அழைக்கப்படவில்லை என்று டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

பெஜுவாங் தலைவர், “ஊழல் கூறுகள்” இருப்பதாகக் காணப்படும் எந்தவொரு ஒத்துழைப்பையும் தனது கட்சி ஆதரிக்காது என்றார்.

“முதலில், இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க பெஜுவாங் அழைக்கப்படவில்லை.

“எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இலாபம் உள்ளதால் நாங்கள் பங்கேற்கிறோம் என்றால், அது பொருத்தமானதல்ல, ஏனென்றால் அதில் ஊழலின் ஒரு கூறு உள்ளது.

“எங்களுக்கு இது இதுவெல்லாம் நீங்கள் கொடுத்தால், நாங்கள் ஆதரிப்போம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று இன்று லங்காவியில், ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.

நேற்று, பெஜுவாங், வாரிசான் மற்றும் மூடா கட்சிகளைப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிஏபி தலைவர் லிம் கிட் சியாங் அழைத்தார்.

சமீபத்தில், அரசாங்கம் பிஎச்-உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இந்தப் பரஸ்பர உடன்பாட்டிற்குப் பிறகு அரசாங்கத்தால் பல சீர்திருத்தங்கள் செய்யப்படும்.

இதற்கிடையில், பெஜுவாங் ஒரு சுயாதீன கூட்டணியாகவே இருக்கும் என்றும் எந்தக் கட்சியுடனும் பிணைக்கப்பட மாட்டாது என்றும், ஆனால் மக்கள் நலனுக்காக விவாதங்களை நடத்த தயாராக இருப்பதாகவும் மகாதீர் கூறினார்.

“நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம், எந்தக் கட்சியுடனும் பிணைக்கப்படவில்லை, அவர்களுடன் பேசலாம், ஆனால் பிணைக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

வெளிப்படையாக, பெஜுவாங் சாதாரண ஜனநாயக நடைமுறையைப் போல அரசாங்கத்தை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

“ஒரு ஜனநாயக அமைப்பில், எதிர்க்கட்சி அரசாங்கத்தைக் கண்டிக்க வேண்டும், இல்லையெனில் எங்களிடம் ஒற்றுமை அரசாங்கம், எல்லோருக்கும் (கட்சிகளுக்கு) ஒரே அதிகாரம் இருந்தால் அது வேறு,” என்று அவர் மேலும் கூறினார்.