அரசாங்கம் மேல்முறையீடு செய்யாது, வாக்கு18-ஐ செயல்படுத்தும்

நாடாளுமன்றம் | கூச்சிங் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்த ஆண்டு டிசம்பர் 31 -க்குள், வாக்கு18 மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவைச் செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீடு செய்யாது என்று செப்டம்பர் 10-ம் தேதி அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்றார்.

“கூச்சிங் உயர்நீதிமன்றத்தில், வாக்கு18 பிரச்சினை குறித்த நீதிபதியின் மறுஆய்வு, வாக்காளர் தகுதி வயது 18 மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவை டிசம்பர் 31, 2021-க்குள் தானாக அமல்படுத்த உத்தரவிட்டத

“எனவே, தடைகள் மற்றும் குறைபாடுகள் இருந்தபோதிலும், தேர்தல் ஆணையம் (இசி) வாக்காளர்களின் தகுதி வயது 18 ஆக இருப்பதை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது மற்றும் நீதிமன்ற முடிவுகளின் அடிப்படையில் தானியங்கி வாக்காளர் பதிவும் செயல்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.

இன்று, மக்களவையில் நடந்த கேள்வி பதில் அங்கத்தில், இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கோவிந்த் சிங் டியோ கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

இது தொடர்பான அனைத்து தீர்வுகளையும் செப்டம்பர் 2022-க்குள் முடித்து செயல்படுத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் முன்பு எதிர்பார்த்தது வான் ஜுனைடி சொன்னார்.

14-வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது தவணை, இரண்டாவது கூட்டத்தில் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாக்களிக்கும் வயது 18 மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவுக்கான கூட்டாட்சி அரசியலமைப்பின் 119-வது பிரிவின் திருத்தத்தைச் செயல்படுத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாக அவர் கூறினார்.

  • பெர்னாமா