அனைத்து எம்.பி.க்களுக்கும் சம ஒதுக்கீடு – பாஸ் தலைவர்கள் ஆதரவு

பாஸ் தலைவரும், முன்னாள் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்க அமைச்சருமான கைருதீன் அமான் ரசாலி, அரசு மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு சம ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு, அவர் வென்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு மக்களின் உரிமை என்று அவர் கூறினார்.

“ஆம், நான் ஒப்புக்கொள்கிறேன், ஏனென்றால் எம்.பி.க்கள் ஒதுக்கீடு என்பது அப்பகுதி மக்களின் உரிமை.

“அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிப்படைத்தன்மைக்காக கண்காணிக்கப்படுவதால், செலவு முறைகளை மத்திய மேம்பாட்டுத் துறை கண்காணிக்க முடியும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

அம்னோ பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது நஸ்ரி அஜீஸ், அதே ஒதுக்கீட்டை அரசு மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளை மேம்படுத்த வழங்க வேண்டும் என்று முன்பு வலியுறுத்தினார்.

“ஏனெனில், இருவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இந்த ஒதுக்கீடு என்பது மக்களுக்கு ஆதரவான ஒன்று.

“நாம் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையில் பாகுபாடு காட்டத் தேவையில்லை, ஏனென்றால் அவை அனைத்தும் மக்களிடம் சென்று சேரும்.

“நாம் ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதால், வாக்களித்த மக்கள் குற்றவாளிகள் இல்லை என்பதால் இந்த உதவி வழங்கப்பட வேண்டும்,” என்று நஸ்ரி மக்களவையில் தனது உரையில் கூறினார்.

இதற்கிடையில், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான “மலேசியக் குடும்பம்” கருப்பொருளின் பொருள்படி, அரசாங்கம் முதிர்ந்த அரசியலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கைருதீன் கூறினார்.

“முதிர்ந்த மற்றும் வளமான அரசியலை ‘மலேசிய குடும்பம்’ என்றக் கருப்பொருளுடன் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்,” என்று அந்தப் பாஸ் பிரதிநிதி கூறினார்.