தமிழர்களின் இனவிகிதாசாரத்தை குறைப்பதற்கு கோட்டாபய ஆலோசனை

தமிழர்களின் இனவிகிதாசாரத்தை குறைப்பதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) ஆலோசனை வழங்கியுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) தெரிவித்துள்ளார்.

ஒரு மாகாணத்திற்கு அப்பால் – இன்னொரு மாகாணத்திற்குள் இருக்கும் கிராம அலுவலர் பிரிவை வடக்குடன் இணைப்பதற்கான ஆலோசனையை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வழங்கியுள்ளதாக, இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரை நிகழ்த்திய போது அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான பெரும்பாலான அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியாவால் கூட முடியாமல் போயுள்ளமை குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளதுடன், தமிழர் தாயக பிரதேசங்களில் இடம்பெறும் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் நில ஆக்கிரமிப்புகளை தடுக்கவேனும் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

(நன்றி IBC TAMIL)