பணம் அச்சிடுவதற்கும் விலையேற்றத்திற்கும் தொடர்பில்லை! – மத்திய வங்கி ஆளுநர்

பணம் அச்சிடப்படுவதற்கும் பொருட்களின் விலை ஏற்றத்திற்கும் தொடர்பு கிடையாது என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, வெளிநாடுகளில் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம் ஆகியனவே இந்த விலையேற்றத்திற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

மத்திய வங்கியின் இணைய தளத்திற்கு பிரவேசித்து இந்த தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். எவ்வளவு தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளது என்பதனை அறிந்து கொள்ள முடியும். பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

நாம் இந்த விடயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் முகாமைத்துவம் செய்கின்றோம். எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலை அதிகரித்தமைக்கும் பணம் அச்சிடலுக்கும் தொடர்பில்லை.

பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி போன்றனவே விலை ஏற்றத்திற்கான காரணமாகும் என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

(நன்றி TAMIL WIN)