புதிய அரசியலமைப்பின் வரைவு இறுதி செய்யப்பட்டது! – இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழு புதிய அரசியலமைப்பின் வரைவை இறுதி செய்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (Prof. G.L. Peiris) இதனை தெரிவித்துள்ளார்.

ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழு கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா (Romesh de Silva) தலைமையில் நிபுணர்கள் மற்றும் புகழ்பெற்ற சட்டத்தரணிகளை கொண்டு நியமிக்கப்பட்டது.

இந்த குழு புதிய அரசியலமைப்பு வரைவின் முன்மொழிவை முடித்துவிட்டதாகவும், இறுதி ஆவணத்தை தயாரிக்க சட்ட வரைவாளர் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் புதிய அரசியலமைப்பின் வரைவை சமர்ப்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அத்துடன், இலங்கை நாடாளுமன்றம் ஜனவரி 2020 இல் புதிய அரசியலமைப்பை நோக்கி கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

(நன்றி Tamil win)