கொழும்பு துறைமுக நகர ஆணையத்திற்கும் சீன நிறுவத்திற்கும் இடையில் முரண்பாடு? – கொழும்பு ஊடகம் தகவல்

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள நிலத்தை வர்த்தகர்களுக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை டொலராக மாற்றுமாறு சீன நிறுவனம் கோரியுள்ளது.

எனினும், கொழும்பு துறைமுக நகர ஆணையம் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் டொலர் பற்றாக்குறை இருக்கும் நேரத்தில் சீன நிறுவனத்தின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என கொழும்பு துறைமுக நகர ஆணையத்தின் தலைவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், துறைமுக நகரத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் சீன நிறுவனத்துக்கும் துறைமுக நகர ஆணையத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவும் தலையிட முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், துறைமுக நகர ஆணையத்தின் விவகாரங்களில் ஜனாதிபதியின் செயலர் தலையிட முடியாது.

துறைமுக நகரத்தின் நிலத்தின் ஒரு பகுதி துறைமுக நகரத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் சீன நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, துறைமுக நகரத்திற்குச் சொந்தமான ஏனைய பகுதிகளில் செல்வாக்கு செலுத்த சீன நிறுவனத்திற்கு உரிமை இல்லை என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நன்றி TAMIL WIN)