எம்ஏ63 திருத்தம் தொடர்பான மசோதா அக்டோபர் 26-ல் தாக்கல் செய்யப்படும்

1963 மலேசிய ஒப்பந்தத்தின் (எம்ஏ63) முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தம், அக்டோபர் 26-ம் தேதி திட்டமிட்டப்படி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் கூறினார்.

எழுந்த குழப்பத்தை விளக்கிய அந்தச் சட்டத்துறை அமைச்சர், ஒத்திவைக்கப்பட்டது மசோதாவின் இரண்டாவது வாசிப்பு (RUU), இரண்டாவது வாசிப்பு அக்டோபர் 28-ம் தேதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

வாரிசான் மற்றும் டிஏபியின் பல எம்.பி.க்கள் மக்களவை கூட்டத்தின் உத்தரவு தாளில் மசோதா இல்லாதப் பிரச்சினையை எழுப்பினர்.

“அக்டோபர் 26 அன்று, நாடாளுமன்றத்தில் எம்ஏ63 தொடர்பான கூட்டாட்சி அரசியலமைப்பில் பல விதிகள் திருத்தம் குறித்த மசோதாவைத் தாக்கல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் தொடரும் […]

“எனினும், அமைச்சரவை உறுப்பினர்களுக்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து மேலும் தெளிவுபடுத்துவதற்குச், சட்டத்துறை தலைவருக்கு (இட்ருஸ் ஹருன்) வசதியாக, சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அக்டோபர் 28-ஆம் தேதிக்கு முந்தய தேதியிலிருந்து மாற்றியமைக்கப்படும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னர், மசோதாவுக்கு “அடிப்படையில்” அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக அந்தச் சந்துபோங் எம்.பி. சொன்னார்.

சட்டத்துறை தலைவரின் விளக்கத்தில், அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் “முழுமையாக திருப்தி அடையும் போது, ​​இரண்டாவது வாசிப்புக்கான மசோதா தாக்கல் செய்யப்படும் தேதி அமைக்கப்படும் என்று வான் ஜுனைடி கூறினார்.

“அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க, திருத்தம் குறித்து விளக்கமளிப்பதற்கு அக்டோபர் 29, வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சட்டத்துறை தலைவரைக் கேட்க அமைச்சரவை ஒப்புக்கொண்டது.

“கொடுக்கப்படும் விளக்கத்தில் அமைச்சரவை முழுமையாக திருப்தி அடைந்தால், நாடாளுமன்றத்தில் மசோதாவின் இரண்டாவது வாசிப்புக்கான புதிய தேதியை நிர்ணயிக்கலாம்,” என்று அவர் கூறினார்.