தகிக்குது தக்காளி – கிலோ ரூ.180; சாம்பார், ரசத்தில் இருந்து தக்காளி ‘எஸ்கேப்’

தக்காளி விலை, உயர்வு, உச்சம்,

கோயம்பேடு: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவால், விலை அதிகரித்து கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், ஹோட்டல்கள், வீடுகளில் சாம்பார், ரசம் போன்ற சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து உள்ளது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக, காய்கறி வரத்து குறைந்து, 3,000 டன் காய்கறிகள் மட்டுமே வந்தன. மழை ஓய்ந்தாலும், விலை குறைந்தபாடில்லை. சமையலுக்கு முக்கியமாக தேவைப்படும் காய்கறிகளில் ஒன்றான தக்காளியின் விலையை கேட்டாலே மக்கள் தகித்துப்போயுள்ளனர். நேற்று (நவ.,21) ஒரு கிலோ தக்காளி விலை ரூ.120 -140 என விற்பனையான நிலையில் இன்று ரூ.180 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வளவு விலை கொடுத்து வாங்கி சமைத்தால் ஹோட்டல்களில் கட்டுப்படியாகாது என எண்ணிவிடவும் வாய்ப்புள்ளது. ஹோட்டல் மட்டுமல்லாமல் பல வீடுகளிலும் தக்காளி இல்லாமல், சாம்பார், ரசம் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தளவிற்கு தக்காளி மிகவும் காஸ்ட்லியான காய்கறியாகியுள்ளது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

dinamalar