கைரி : டெல்டாவைவிட வேகமாக பரவக்கூடியது ஓமிக்ரான்

புதிய கோவிட்-19 பி.1.1.529 மாறுபாடு, இப்போது ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது, டெல்டா மாறுபாட்டை விட அதிகமாக பரவக்கூடியது, ஆனால் வைரஸ் எவ்வளவு கொடியது என்பது இன்னும் தெரியவில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் (மேலே) தெரிவித்தார்

“ஓமிக்ரான் டெல்டாவை விட அதிகமாக பரவக்கூடியது என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் அதன் வீரியம் எங்களுக்கு இன்னும் தெரியவில்லை”

“இதற்கிடையில் நாம் செய்யக்கூடியது என்னவென்றால் கைகளை அடிக்கடி கழுவுவது, முக கவசம் அணிவது, இரண்டு மீட்டர் இடைவெளியை மேற்கொள்வது, வயதானவர்களை பாதுகாப்பாக வைத்திருத்தல் இவைகள் ஆகும்.

புதிய கோவிட்-19 பரவலைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஈஸ்வதினி, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய ஏழு நாடுகளுக்கு மலேசியர்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை கைரி அறிவித்தார்.

நாட்டின் நுழைவு இடங்களுக்கு வரும் பயணிகள் உட்பட எல்லை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங் ஆகிய மூன்று நாடுகள் இதுவரை ஓமிக்ரான் தொடர்பான நேர்வுகளை அறிவித்துள்ளன என்றார்.