இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 950 ஆக உயர்வு – 20க்கு மேற்பட்ட மாநிலங்களில் பரவியது

ஒமைக்ரான் வைரஸ்

புதுடெல்லி: ஒமைக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து 250-க்கு மேலானோர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றைய நிலவரப்படி 781 பேர் பாதிக்கபட்டிருந்தனர்.

நேற்றிரவு நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 252 பேரும் புதுடெல்லியில் 238, குஜராத்தில் 97, கேரளா 65, தெலுங்கானாவில் 62 பேரும் ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 950 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு உள்பட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதியானது. இதுவரை 250க்கு மேலானோர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.