ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதே நல்ல முடிவாகும்! – கோமஸ்

ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் அசாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகளை, ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் முறையாகக் கையாள தவறி விட்டனர் என்கிறார்  பொருளியல் நிபுணர் டரண்ட்ஸ் கோமஸ்.

இவர் இதற்கு முன்பு அந்த இலாகாவின் ஆலோசகர் மன்றத்தில் ஒரு அங்கத்தினராக இருந்தவராவார். அந்த ஆலோசகர் மன்றம் இதற்கு முன்பு  அசாம் பாக்கி எந்த தவறும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.

அதோடு அவர்கள் அசாம் பாக்கி குறித்த பங்கு பரிவர்த்தனை சார்புடைய செயல்கள் முறையாக இருப்பதாகவும் அசாம் பாக்கி மீது எந்த குற்றமும் இல்லை என்றனர்.

கோமஸின் கருத்துப்படி இது போன்ற முடிவை செய்ய அவர்களுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என்கிறார். ஊழல் தடுப்பு ஆணையத்தின்  ஆலோசனை மன்றமாக இருக்கும் அந்த மன்றம் அசாம் பாக்கி போன்றவர்கள் குற்றம் செய்தார்களா – இல்லையா என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் அற்றவர்கள். அது அவர்களுக்கான கடமைகளுக்கு அப்பாற்பட்டதாக அமைகிறது.

இந்த ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்வதுதான் நல்ல முடிவாகும் என்கிறார் கோமஸ். இவர் இதற்கு முன்பு அந்த ஆணையத்தின் ஆலோசகர் மன்றத்தில் ஓர் அங்கத்தினராக இருந்தவர்.

இவரின் கருத்துப்படி அந்த ஆலோசனை மன்றம் இதற்கு முன்பு கூறிய பொழுது அவர்கள் அசாம் பாக்கி எந்த தவறும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர். அதோடு அவர்கள் அசாம் பாக்கி சம்பந்தப்பட்ட  பங்கு பரிவர்த்தனை முறையாக கையாளப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.

அசாம் பாக்கி, தனது பங்கு பரிவர்த்தனை பற்றிக் குறிப்பிடும் போது, தனது சகோதரர் தன்னுடைய பெயரில் பதிவு செய்யப்பட்ட பங்கு பரிவர்த்தனை கணக்கில் வாங்கியதாகக் கூறியிருந்தார்.