செம்பருத்தி மணியம் காலமானார்

செம்பருத்தி மாத இதழின் முன்னாள் நிருவாக ஆசிரியர் மணியம் சின்னப்பன் இன்று காலமானார். 

1998 முதல் 2011 வரையில் மாத இதழாக வெளியீடு கண்ட செம்பருத்தியின் நிருவாக ஆசிரியராக பணியாற்றிய மணியம் இன்று தமது 63-வது வயதில் காலமானார்.

“உனதுரிமை இழக்காதே, பிறர் உரிமை பறிக்காதே” என்ற சுலோகத்தை நடைமுறை எழுத்து முறையில் ஒரு இதழாக வெளியிட்டு அதன் வழி இந்நாட்டு இந்தியர்களிடையே அரசியல் சமூக உரிமை அடிப்படையிலான விழிப்புணர்ச்சிக்கு வித்திட்ட செம்பருத்தி இதழுக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.

அரசின் பதிப்புரிமை சட்டத்தின்கீழ் உள்ள கட்டுப்பாடுகளின் எல்லை வரையில் பத்திரிக்கை சுதந்திரத்தைக் கொண்டு சென்ற பெருமை இவருக்கு உள்ளது.         

அன்னாரின் இறுதிச்சடங்குகள் இன்று (23.01.2022) காலை 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரையில் NO. 11 LORONG BATU NILAM 28C, BANDAR BARU BUKIT TINGGI, 41200 KLANG என்ற முகவரியில் நடைபெறும். அதன் பின்னர் அன்னாரின் பூதவுடல் கிள்ளான் சிம்பாங்லீமா  மின் சுடலையில் தகனம் செய்யப்படும்.

தகவல் தொடர்பு:  சந்திரகுமார் 012 3770132.

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்களுக்கு மலேசியா-இன்று  நிர்வாகத்தினரின் ஆழ்ந்த அனுதாபங்கள்.