ஜோகூர் மிதிவண்டிகள் அசம்பாவிதமும் மலேசியாவின் இனவாதமும்

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஜோகூர் பாருவில்,  நடந்த மிதிவண்டிகள் – வாகன விபத்தில் 8 சிறார்கள் கொல்லப்பட்டனர்.

அந்த சம்பவத்தின் பின்னணியில் நடக்கும் இனவாத நடப்புகள் மலேசியாவில் மக்கள் குறிப்பாக அரசியல் சார்புடைய வகையில் செயலாற்றும் இனவாதிகள் இந்த நடத்தையை எப்படிக் கொண்டு செல்கிறார்கள் என்று காண்போம்.

முதலில் இந்த மிதிவண்டிகள் அசம்பாவிதம் எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம். மாமூடியா இடுகாட்டுக்கு அருகில் உள்ள லிங்காரன் சாலையில் நள்ளிரவுக்குப் பிறகு சுமார் 3 மணியளவில் காரில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு சீன மாது (Sam Ke Ting) (வயது 22) அந்த இருட்டில் மிதிவண்டிகளுடன்  இருந்த “மாட் லாஜாக்” என்ற ஒரு சிறார்கள் குழுவினரை மோதியதாகக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. அந்த சம்பவத்தில் 8 சிறார்கள் மாண்டனர்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கை விசாரித்த மஜிஸ்திரேட்  நீதிமன்றம் அந்த வாகனத்தை ஓட்டிய பெண்மணி குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்க தரப்பு மேல்முறையீடு செய்தது. விசாரித்த உயர் நீதிமன்றம் அந்தப் பெண்மணி குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்து மீண்டும் விசாரணைக்கு அதே மஜிஸ்திரேட்  நீதிமன்றத்திற்கு அனுப்பியது. முழு விசாரணைக்கு பிறகு அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். திரும்பவும் அந்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. அதைப் பரிசீலனை செய்த நீதிபதி அந்த சீன பெண்மணிக்கு 6 ஆண்டுகள் சிறையும் ரிம 6,000 அபராதமும் விதித்தது.

 “மாட் லாஜாக்”

காவல்துறை தரப்பு கூற்றின் படி அந்த சமயத்தில் பதிமூன்று வயது முதல் 17 வயது வரை உள்ள சுமார் 30 சிறார்கள் சாலையில் தங்களது மிதிவண்டிகளுடன் அங்கு கூடியிருந்தனர். அந்த வழியாக ஒரு சீன மாது ஓட்டிவந்த நிசான் பல்மேரா வாகனம் மிதிவண்டிகள் மீது மோதியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அந்த வாகனத்தை ஓட்டியவர் சாம்.

அந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட நபர்கள் Mohamad Azrie Danish Zulkefli, 14; Muhamad Shahrul Izzwan Azzuraimie, 14; Muhammad Firdauz Danish Mohd Azhar, 16; Fauzan Halmijan, 13; Mohamad Azhar Amir, 16; Muhammad Harith Iskandar Abdullah, 14; Muhammad Shahrul Nizam Marudin, 14 and Haizad Kasrin, 16.

இந்த சம்பவத்தில் வாகனத்தை ஓட்டிய நபர் 22 வயதுடைய ஒரு சீன மாது இதில் இறந்தவர்கள் மலாய் இனத்தைச் சார்ந்த சிறுவர்கள் இது. ஒரு அசம்பாவிதமாக இருப்பினும் இதைக் கையாளும் வழிமுறை இனவாதத்தின் எல்லையை எட்டியுள்ளது எனலாம்.

இந்த சம்பவத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அந்த வாகனத்தின் ஓட்டுநர் அவருடைய வாக்குமூலத்தைப் பெற்றபின் விடுவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுல்கிப்லி நொர்டின், காவல்துறை தரப்பு அந்த சீனர் அடையாளத்தை வெளியாக்கவில்லை என்று குறை கூறினார். அதோடு அந்த சீனர்  விசேஷ தொடர்புகள் கொண்டவர் என்றும் கூறினார் . அதைத்தொடர்ந்து அந்த மாதுவின் புகைப்படத்துடன் இந்த சம்பவம் குறித்து ஒரு மறியல் செய்யவேண்டும் என்ற வகையில் செய்திகள் பரப்பப்பட்டன.

அந்த செய்தியில் ‘சிறை தண்டனையோ அபராதமோ இன்றி அந்த சீன மாது விடுவிக்கப்பட்டதிற்கு எதிராகப் போராட்டம்’ என்று அந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் அறிவித்தனர். ஆனால் அந்த போராட்டம் நடைபெறவில்லை.

இனவாதம் இதற்கு முன்பு என்ற நம்பிக்கை கூட்டணி ஆட்சியின் போது  தீயணைப்பு வீரர் அடிப்-பின் மரணம் விமர்சனத்துக்கு ஆளாகியது. இந்த சம்பவம் சீபீல்ட் கோயில் வளாகத்தில் நடந்தது.

அதைத்தொடர்ந்து மலாய் இனவாத குழு மலாய்க்காரர்களின் ஒற்றுமை என்ற தலைப்பில் ஒரு தேசிய மலாய் இனவாத குழுவை அமைத்தனர் அதே காலகட்டத்தில் அந்த சீன மாது மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். சித்தி பஜார் தனது தீர்ப்பில் என்ற அந்த சீன மாது பொறுப்பான வகையில்தான் வாகனத்தைச் செலுத்தினார் என்றும் அந்த விபத்து நடந்த நேரத்தில் அந்த வாகனம் ஓட்டுநர் அந்த விபத்து நடக்கும் என்பதை அவர் எதிர்பார்க்க இயலாது என்றும் நள்ளிரவு 3 மணி அளவில் அவ்வளவு நபர்கள் மிதிவண்டிகளில் ஒன்றாக இருப்பார்கள் என்பது இயல்பற்றது என்றார்.

இந்த முடிவை இனவாதத் தன்மையுடன் அவர் ஒரு சீனர் என்பதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற வகையில் விவாதிக்கப்பட்டது.

 இதுதான் நமது நிலை

பாஸ் கட்சியின் பொருளாளர் இந்த சீன மாதுவின் விடுதலை பற்றி முகநூலில் அவர் எழுதியது, “பெரியோர்களே இதுதான் நமது நிலை இப்பொழுது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியுடன் முடித்தார்”.

ஷேக் உசேன் என்ற இன்னொரு தலைவர் ஜனநாயக செயல் கட்சியினர் தீவிரமாக அந்த சீன மாதுவை பாதுகாக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டார். அதாவது தனது நடத்தையால் எட்டு நபர்கள் கொல்லப்பட்ட போதும் அவர் குற்றவாளி இல்லையா என்றார்.

இதே காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் பல நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவரான சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி குணசேகரன் விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அம்னோ தலைவர் ஜஹிட் ஹமிடி,  நம்பிக்கை கூட்டணியின் அரசாங்கத்தில் நீதி தடம் புரண்டு விட்டது என்ற வகையில் ஒரு விமர்சன பிரச்சாரத்தைத் துவங்கினார்.

அதில் அவர் விடுதலைப்புலிகள் என்ற வகையில் கைது செய்யப்பட்ட நபர்களின் விடுதலை சீபீல்டு  மாரியம்மன் வளாகத்தில் இறந்த  தீயணைப்பு வீரர் அடிப் என்பவரின் நீதி அதோடு சைக்கிள் ஓட்டிகள் சம்பவத்தில் எட்டு குழந்தைகள் மிதிவண்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு மாதுவால் கொல்லப்பட்டனர் ஆனால் அந்த மாது விடுவிக்கப்பட்டார், காரணம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதாகும். ஆனால் அந்தக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். அவர்கள் இப்பொழுது இல்லை என்றார் ஜஹிட் ஹமிடிட் பிறகு தான் சொல்ல வந்தது அல்ல என்னுடைய கருத்துக்களை மட்டுமே என்று கூறினார்.

 சிறைக்கு அனுப்பியது

கடந்தவாரம் அந்த சீன பெண்மணி  உயர் நீதிமன்றத்தால் மீண்டும் விசாரிக்கப்பட்டு, அது அவருக்கு ஆறு வருடம் சிறைத் தண்டனையும் 6 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது. அதோடு அவருக்கு மேல்முறையீடு அவகாசத்தை வழங்க மறுத்து அவரை சிறைக்கு அனுப்பியது,

இந்த நிலைப்பாடு மீண்டும் விவாதத்திற்கு வந்தது. அதாவது முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு அவர் சுதந்திரமாக இருக்கும் பொழுது இந்த சீன மாதுவிற்கு எதனால் ஜாமீன் மறுக்கப்பட்டது என்ற கேள்வியாகும்.

இந்த சீன மாதுவுக்கு உதவுவதற்கு ஜனநாயக செயல் கட்சியும் மலேசியச் சீனர் சங்கமும் முன்வந்தனர். இவர்களின் நடத்தை இனவாதத்தைத் தூண்டுவதாக உள்ளது என்கிறார் நஜிப் ரசாக்.

சமூக வலைத்தளங்களில் இந்த இனவாத சார்பான செய்திகளின் சாரம் சீனர்களைப் பொறுத்தமட்டில் நீதித்துறை சமநிலையில் செயல்படவில்லை, எங்கு உள்ளது நீதி என்ற வகையான விவாதங்கள் ஆகும்.

இது சார்பாக விமர்சித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ், அந்த சீன மாது முதலில் விடுதலையும் பின்னர்  தண்டனையும் பெற்றவை  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை என்றார். மேலும் அவை சட்டம் சம்பந்தப்பட்டவை என்பதை மக்கள் உணரவேண்டும்.

நீதிமன்றத்தில் இருக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எனவே நீதிமன்றங்களைப் பற்றி விமர்சனம் செய்வது தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அவர் நீதிமன்றத்தின் முடிவை விமர்சனம் செய்வது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் எனவே அட்டார்னி ஜெனரல் இவை சார்ந்த செய்திகளைக்  கவனித்து குறிப்பிட்ட  அந்த நபர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் இந்த சீன மாதுவின் வழக்கை இன அடிப்படையில் திசை திருப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார், அது  பொறுப்பற்ற செயலாகும் என்று சாடினார்.

மிதிவண்டி அசம்பாவிதம் இனவாத விவாதத்தை உருவாக்கி இருப்பினும் அது அனைத்து வெகுசன மக்களையும் சார்ந்தது என்று கூற இயலாது 2017 ஆம் ஆண்டு அந்த மாது விடுவிக்கப்பட்ட பொழுது போராட்டம் நடத்த வேண்டும் என்று அறைகூவல் எழுந்தது அந்த சமயத்தில் ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் ஜொகூர் மாநிலத்தில் உள்ளவர்களை அந்த மறியலில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஆலோசனை கூறினார்.

அதோடு பல்லின மதத்தை சார்ந்தவர்கள் அந்த சீன மாது குற்றம் செய்தார் என்பதற்கு மாற்றுக் கருத்துக் கொண்டுள்ளனர்.

விடியற்காலை 3 மணி அளவில் அந்த சாலையில் மிதிவண்டிகள் ஓட்டுவதற்காக 30 நபர்கள் கூடியிருந்தது முறையற்ற செயலாகும். அதற்கு அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர் மேலும் இதை இனவாத நோக்கோடு காண்பது சமூகத்திற்கு நல்லதல்ல என்பதையும் வற்புறுத்துகின்றனர்.