பொதுத்தேர்தலில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை பெஜுவாங் வழிநடத்த முடியும் – மகாதீர்

பெஜுவாங் தலைவர் டாக்டர் மகதீர் முகமட், ஊழலுக்கு எதிரான கொள்கைகளை பின்பற்றும் பல இன கட்சிகளின் கூட்டணியில் ஒரு சாத்தியமான தலைமையாக  அவரது கட்சி திகழும் என்கிறார்..

2018ல் பக்காத்தான் ஹராப்பானை ஆட்சிக்கு கொண்டு  சென்ற முன்னாள் பிரதம மந்திரி, அடுத்த பொதுத் தேர்தலில் ஊழலை விரும்பாத வாக்காளர்கள் பெஜுவாங்க்கு வாக்குகளை செலுத்துவார்கள் என்று கூறினார்.

2018 பொதுத் தேர்தலில் PH வெற்றி பெற்றதுக்கு காரணம் ஊழலுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை ஆதரித்த வாக்காளர்கள்தான் என்கிறார்.

GE15 க்குப் பிறகு அடுத்த அரசாங்கத்தை அமைக்க பெஜுவாங் போதிய இடங்களைப் பெறாமல் போகலாம், மேலும் ஊழலில் ஈடுபடாத கட்சிகளுடன் ஒருவித கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கும் என்று அவர் கூறினார்.

“நினைவில் கொள்ளுங்கள், அம்னோவால் தனித்து அரசாங்கத்தை அமைக்க முடியாது” என்று மகதீர் கூறினார்.

“அம்னோ மலாய் கட்சிதான் என்றாலும், மலாய்க்காரர் அல்லாத கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அது ஏற்றுக்கொண்டது. பெஜுவாங்கும், அதன் ஊழல் எதிர்ப்புக் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டு, மக்களுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் நியாயமான மற்றும் சமமான வழியில் சரி செய்யப்பட வேண்டும் என்பதை நன்கு அறிந்த பல இனக் கட்சிகளுடன் கூட்டணியில் ஒரு தலைமையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

ஜனநாயகம் அல்லாத வழிகளில் PH இடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய இரண்டு அரசாங்கங்கள் மீதான “வெறுப்பு” காரணமாக, GE15 அன்று வாக்குப்பெட்டிகளில் ஊழலுக்கு எதிரான வாக்காளர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று அவர் கணித்துள்ளார்.

ஆகஸ்ட் 2020ல் மகதீர் நிறுவிய பெஜுவாங், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் உள்ள ஒரு கட்சியாக தன்னைத்தானே அது முன்னிறுத்திக் கொண்டுள்ளது.

இருப்பினும், இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில் அது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மார்ச் மாதம் நடைபெற்ற ஜொகூர் தேர்தலில் அனைத்து 42 பெஜுவாங் வேட்பாளர்களும் பதிவான வாக்குகளில் குறைந்தது எட்டில் ஒரு பங்கை 12.5விழுக்காடு பெறத் தவறியதால், டெபாசிட்டை  இழந்தனர்.

-freemalaysiatoday