முதலாளிகளின் அலட்சியத்தை குற்றமாக கருதும் சட்டங்கள் தேவை

தொழிலாளர் சட்ட சீர்திருத்தக் கூட்டமைப்பு (LLRC) பணியிடத்தில் தொழில்சார் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு, விபத்துக்களுகான அலட்சியப் படுகொலைகளுக்கு நிறுவனங்களை பொறுப்பேற்கும் சட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களை கார்ப்பரேட் நபர்களாகக் கருதும் மற்றும் கிரிமினல் குற்றங்களுக்காக அவர்களுக்கு தண்டனை வழங்கும் கார்ப்பரேட் கொலை குற்ற சட்டத்தை அரசாங்கம் இயற்ற வேண்டும் என்று குழு கூறியது.

தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சமூகங்களின் கூட்டணியானது, தமது தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பூர்வாங்க அறிக்கை 2022 -இல் அரசாங்கத்திற்கு  இந்தப் பரிந்துரையை முன்வைத்தது.

ஹரி ராயா விழாக்களுக்குப் பிறகு முழு அறிக்கையும் வெளியிடப்படும் என்று குழு கூறியது. ஆனால் அதன் ஆரம்பப் பரிந்துரைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்புக்கள் மற்றும் காயங்கள் குறித்து பதிவு செய்வதில் அரசாங்கம் கூடுதலான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தன .

அதன் ஆரம்ப கண்டுபிடிப்புகளின் அடிப்படையில்,  நியாயமான இழப்பீட்டைப் பெறாத கடந்த கால மரணத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அங்கீகரிக்கும் ஒரு திட்டத்திற்கு அந்த குழு அழைப்பு விடுத்தது.

பூர்வீக நாடுகளில் உள்ள குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதை சரிபார்க்க ஒரு எல்லை தாண்டிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.

ஆரம்ப அறிக்கை ஏப்ரல் 28 அன்று சர்வதேச தொழிலாளர்களின் நினைவு தினத்துடன் இணைந்து ஒரு செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது, இதில் மலேசியாவில் பணியிடங்களில் இழந்த உயிர்களுக்காக ஒரு கணம் மௌனம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டது.

பெருநிறுவன படுகொலைச் சட்டத்தை அமல்படுத்திய பிற நாடுகளில் யுனைடெட் கிங்டம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அடங்கும்.

இங்கிலாந்தில், 2007 இல் உருவாக்கப்பட்ட  இந்த சட்டம், அப்போது நடைமுறையில் இருந்த குற்றவியல் சட்டம் முதலாளிகளின்  அலட்சியத்தால் உண்டாகும் மரணங்களுக்கு தகிந்த நீதியை வழங்க வில்லை.

கிரவுன் பிராசிக்யூஷன் சர்வீஸ் வலைத்தளத்தின்படி, இந்த சட்டம் குற்றத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துகிறது, இதனால் குறிப்பிட்ட தனிநபர்களின் செயல்களை விட நிறுவனத்தின் நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறது.

“நீங்கள் ஒரு தொழிலாளியைக் கொன்றால், நீங்கள் சிறைக்குச் செல்ல வேண்டும்,” என்று LLRC இணைத் தலைவர் என் கோபால் கிஷ்ணம் கூறினார்.

மலேசியாகினியிடம் பேசிய அவர், பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் தொழிலாளர்கள் பயன்படுத்த பாதுகாப்பான உபகரணங்களை வழங்கத் தவறிய முதலாளிகளுக்கு அரசாங்கம் கட்டாய சிறைத்தண்டனையை அமல்படுத்த வேண்டும் என்றார்.

LLRC இணைத் தலைவர் என் கோபால் கிஷ்ணம்

தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மீறல்களை நிர்வகிக்கும் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் முன்பே கூறியுள்ளன.

“பணியிடங்களில் பாதுகாப்பற்ற பணி நிலைமைகள் காரணமாக ஒரு தொழிலாளியைக் கொல்வதில் முதலாளிகள் உடந்தையாக இருந்தால், பணச் செலுத்துதலின் சாத்தியம் இல்லாமல் சிறைத் தண்டனையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்,” என்று கோபால் கூறினார்.

 

பாதுகாப்பு பெரிய பிரச்சினையாக கருதப்படவில்லை

2019 ஆம் ஆண்டின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, பாதுகாப்பற்ற பணியிடச் சூழல் காரணமாக ஒரு வங்கதேசத் தொழிலாளி இறந்தபோது, ​​சம்பந்தப்பட்ட முதலாளி RM35,000 அபராதம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று கோபால் விளக்கினார்.

“அதுதான் தொழிலாளியின் வாழ்க்கையின் மதிப்பு,” என்று அவர் கூறினார்.

சில முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களிடமிருந்து அதிக  உற்பத்தித்திறனை வலியுறுத்தும் போது, உயர்தொழில்நுட்ப இயந்திரங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை அகற்றும் சூழல் உருவாகிறது  என்று அவர் விளக்கினார்.

“இதை அவர்களின் பொறுப்பிலிருந்து விடுபட முடியாது, ஏனெனில் தொழிலாளர்கள் செயல்படும் இயந்திரங்கள் நல்ல மற்றும் பாதுகாப்பான வேலை நிலையில் இருப்பதற்கு ஒவ்வொரு முதலாளியும் பொறுப்பு,” என்று அவர் கூறினார்.

எல்.எல்.ஆர்.சி இணைத் தலைவர் ஐரீன் சேவியர் ஆஸ்திரேலியாவை ஒரு  சிறந்த பணியிட தொழில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான உதாரணமாக காட்டினார்.

பெரிய கட்டுமானத் தளங்களில், பணியிடத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பிரதிநிதிகள், பாதுகாப்பு அபாயத்தைக் கண்டறிந்தால், விசில் அடித்து வேலையை நிறுத்திவிடலாம் என்பதற்கு அவர் ஒரு உதாரணம் கொடுத்தார்.

இதுபோன்ற நடவடிக்கைகள், உள்ளூர் தொழிற்சங்கங்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு கொண்டு வந்ததாக சேவியர் கூறினார்.

மலேசியாவில் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய அணுகுமுறையை ஒப்பிட்டுப் பேசிய அவர், இது ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதப்படாததால் இது சற்று பின்தங்கியுள்ளது என்றார்.

தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையிடம் ஒரு கேள்வியை முன்வைத்த சேவியர், எலக்ட்ரானிக்ஸ் துறையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின், பாதுகாப்பிற்கான துறையின் நடவடிக்கைகள் என்ன என்று கேட்டார், அவர்களில் பலர் பல்வேறு வகையான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இறப்புகள் பணியிடத்துடன் தொடர்புடையவை அல்ல என்று மருத்துவர்கள் கூறியதாக அவர் கூறினார், ஆனால் பெண்களின் பணியிடம் எப்படி இருந்தது என்பது குறித்து மருத்துவர்களுக்கு எந்த ஆதாரமும் தெரியாது என்றும் கூறினார்.

“ஒட்டுமொத்த மருத்துவத் தொழிலும் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் பற்றிய தவறான கருத்தைக் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.” என்றார்.

சிலிக்கன் பள்ளத்தாக்கு மற்றும் தைவானில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, அவை தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து முற்போக்கான அணுகுமுறையைக் கொண்டிருந்தன என்று சேவியர் மேலும் கூறினார்.

முதலாளிகளிடம் சிக்கியது

LLRC பூர்வாங்க அறிக்கை, குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்களின் போது குறிப்பாக பெண்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது வீட்டுப் பணியாளர்கள் முதலாளிகளிடம்  “சிக்கிகொண்டனர்”, அதனால் துஷ்பிரயோக வழக்குகளில் வழி அவர்களால் உதவி பெற முடியவில்லை என்றும் குழு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் சந்திப்பில் கலந்து கொண்ட புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு குரல் கொடுத்தது மற்றும் தனது துறையில் பெண்களுக்கான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்று விளக்கினார்

அப்பெண்ணின் முதலாளி தண்ணீர் குழாய் வெப்ப மட்டத்தை அதிகமாக்கியதால் அந்த பெண்ணின் கைகள் வெந்து போகின,  அவளுடைய காயத்திற்கு பற்பசையை மட்டும் கொடுத்ததால் அவள் கைகள் மேலும் புண்ணாகின.

வீட்டுப் பணிப்பெண் ஒருவர் காயமடையும் போது முதலாளிகள் பின்பற்ற வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் எதுவும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதே வேலையில் அவர்கள், வலியைத் தாங்கிக் கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களது அறையில் இருப்பார்கள்.

இந்த நிகழ்வில் அடையாளம் தெரியாத இரு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பணியிட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தொழிற்சாலைத் தொழிலாளி மற்றும் ஒரு கட்டுமானத் தொழிலாளி ஒவ்வொருவரும் தங்கள் நேபாளி மொழியில் நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் பணியிடத்தில் இறப்பதைக் கண்டதாகப் பகிர்ந்து கொண்டனர்.

தொழிலாளர்களின் நோய்களைப் பற்றிய புகார்களை முதலாளிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சில சமயங்களில் இது அவர்களின் மரணத்திற்கு வழிவகுப்பதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளி பட்டியலிட்ட சில நோய்களில் அதிக இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களும் அடங்கும்.

விபத்துக்கள் ஏற்பட்டால், சில முதலாளிகள் பணியாளரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அதிக நேரம் காக்கவைத்தனர்.

ஒரு தொழிலாளி பாதுகாப்பற்ற வீட்டு நிலைமைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறினார், மற்றும் ஒரு தொழிலாளி இறந்தபோது, அவரது மரணத்திற்கான காரணம் யாருக்கும் தெரியாது என்றனர்..

“அவர்கள் எங்களை ஒரே நேரத்தில் 12 முதல் 20 மணிநேரம் வேலை செய்ய வைக்கிறார்கள்,” என்றும் அவர்களில் ஒருவர் கூறினார்.