ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி படிப்படியாக குறைக்கப்படும்- ஜரோப்பிய நாடுகள் அறிவிப்பு

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இந்த போர் காரணமாக ஐரோப்பிய யூனியன் ரஷியாவுக்கு எதிராக ஏற்கனவே பொருளாதார தடை விதித்து உள்ளது.

ரஷியாவில் இருந்து நிலக்கரி இறக்கு மதிக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் தடை விதித்து உள்ளது.

இதன் தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் துணைத்தலைவர் உர்தலா லொண்டெர் லெயேன் கூறியதாவது:

ரஷியா மீது 6 புதிய பொருளாதார தடைகளுக்கான திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் சம்மதிக்கும் பட்சத்தில் படிப்படியாக குறைக்கப்படும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்படும். இதனால் மாற்று ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சர்வதேச பண பரிவர்த்தனை அமைப்பான ஸ்விப்ட் இணைப்பில் இருந்து ரஷியாவின் 3 முக்கிய வங்கிகளை துண்டிக்க பரிந்துரைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

ஐரோப்பிய யூனியன் ரஷியாவிடம் இருந்து 60 சதவீதம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு தடை விதிக்கும் பட்சத்தில் ரஷியாவுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

அதே சமயம் ரஷியாவை நம்பி இருக்கும் ஜரோப்பிய யூனியன் கச்சா எண்ணெய்க்காக என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என தெரியவில்லை.

 

 

Malaimalar