இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 3,451 பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,451 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி உள்ளது.

நேற்று பாதிப்பு 3,805 ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

டெல்லியில் புதிதாக 1,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியானாவில் 473, கேரளாவில் 461, உத்தரபிரதேசத்தில் 264, மகாராஷ்டிராவில் 253, கர்நாடகாவில் 171 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 2 ஆயிரத்து 194 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் 35 மரணங்கள் சேர்க்கப்பட்டது. இதுதவிர நேற்று டெல்லியில் 2, மகாராஷ்டிராவில், உத்தரபிரதேசம், குஜராத்தில் தலா ஒருவர் என மேலும் 40 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,24,064 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 3,079 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 57 ஆயிரத்து 495 ஆக உயர்ந்தது.

தற்போது 20,635 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 190 கோடியே 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 17,39,403 டோஸ்கள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 3,60,613 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 84.06 கோடியாக உயர்ந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

Malaimalar