ஓங் பதவி விலகுகிறார் – சன நாயக செயல்கட்சி ஒரு சிறந்த அரசியல்வாதியை இழக்கிறது

இரண்டு முறை டிஏபி எம்பி ஆக இருந்த  ஓங் கியான் மிங், “புதிய குழு அமைக்கவும் மற்றும் மறுசீரமைப்பு செய்ய” அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒரு கற்றறிந்த சிந்தனைவாதியும், செயலாக்கதிலும் நாட்டு நடப்பிலும் தன்னை முழுமயாக உட்படுத்திய இவரின் பதவி விலகல் மலேசிய அரசியலுக்கு ஒர் இலப்பாகும்.

மே 2018 இல் பாங்கியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓங், இதற்கு முன்பு 2013 முதல் 2018 வரை செர்டாங்கிற்கு எம்பியாக இருந்தார், இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலுக்கு (GE15) தன்னை வேட்பாளராக முன்னிறுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

GE15 இல் பாங்கிக்கு டிஏபியின் வேட்பாளராக யார் பெயரிடப்பட்டாலும் அவருக்கு முழு ஆதரவை அளிப்பதாகவும், நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை தொகுதிக்கும் கட்சிக்கும் தொடர்ந்து சேவை செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.

இன்று காலை ஒரு அறிக்கையில், மார்ச் மாதம் நடந்த கட்சியின் மத்திய செயற்குழு (CEC) தேர்தலில் தனது இடத்தைப் பாதுகாக்கத் தவறிய 46 வயதான ஓங்  : “சமீபத்தில் நடந்த டிஏபி மத்திய செயற்குழு தேர்தல் முடிவுகள் முன்னணி அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க என்னை உறுதிப்படுத்துவதில் சிறு பங்கைக் கொண்டிருந்தபோதிலும்.முழுமையமான முடிவிற்கு இது முக்கிய காரணம் அல்ல என்று அவர் கூறினார்.

“செர்டாங்கின் நாடாளுமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக நான் முதன்முதலில் முன்மொழியப்பட்டபோது, ​​நான் இரண்டு முறை பதவி வகித்து பின்னர் நிலைமையை மறுபரிசீலனை செய்வேன் என்று எனது மனைவியுடன் ஒப்பந்தம் செய்தேன். எனது இரண்டாவது பதவிக்காலம் முடியும் தருவாயில், எனது தொகுதிக்கும், எனது கட்சிக்கும், நாட்டிற்கும் என்னால் இயன்றவரை சேவை செய்துள்ளேன் என நம்புகிறேன். கட்சியில் உள்ள இளைய தலைமுறையினர் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.

தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை,மீண்டும் ஒரு புதிய குழு அமைக்கவும் மற்றும்  மறுசீரமைப்பு செய்ய ஒரு இடைவெளி எடுத்துக்கொள்கிறேன் “. என்று அவர் கூறியுள்ளார்.

“எனது சேவைகள் தேவைப்பட்டால், எதிர்காலத்தில் கட்சிக்கும் நாட்டிற்கும் சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன். நான் மிகவும் தேவையான ஓய்வு எடுத்துக்கொண்டு, GE15 க்குப் பிறகு எனது உடனடித் திட்டங்களாக, கடந்த ஒன்பது ஆண்டுகள் நான் குவித்துள்ள திறன்கள் மற்றும் அறிவை எப்படி, எங்கு சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றியம் , உடற்பயிற்சி செய்யவும், படிக்கவும், சிந்திக்கவும் அவரது நேரத்தை செலவிடப்போவதாக அவர் கூறியுள்ளார்” .

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஓங், ஆதரவளித்த தனது வாக்காளர்கள் மற்றும் DAP கட்சி உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

கடந்த ஒன்பது வருட எம்.பி.யாக இருந்தது “தனது வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்” என்று விவரித்த அவர், டோனி புவாவை கட்சிக்குள் கொண்டு வந்ததற்காக அவருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக பணியாற்ற அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.

டிஏபி தலைவர் லிம் குவான் எங் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்காகவும், கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கும் நன்றி தெரிவித்தார், அவருடைய பணி நெறிமுறை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பார்க்கும்பொழுது  “நான் உட்பட அவரது வயதில் இருக்கும் பாதி பேர்களுக்கு அவமானமாக இருக்கும் ” என்று அவர் கூறினார்.