செம்பணை எண்ணெய் புறக்கணிப்புக்கு தீர்வு காண தூதுக்குழு

மலேசியாவில் தோட்டப்புற தொழிலாளர்கள் அடிமைத்தனமாக நடத்தப்படுகின்றனர் என்ற அனைத்துலக பிரச்சாரத்தின் எதிரிலியாக, மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் செம்பணை பொருட்களை தடை செய்ய கோரி உலக அளவில் பிரச்சாரம் நடத்தப்பட்டது.

அதன் விளைவாக மலேசியவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.

பெருந்தோட்ட மூலப்பொருட்ட்கள் அமைச்சின் (Plantation Industries and Commodities Ministry (MPIC) செயலாளர் ரவி முத்தையா, செம்பணை எண்ணெய் புறக்கணிப்புக்கு தீர்வு காண சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவுக்கான மலேசிய தூதுக்குழுவை  வழிநடத்யுள்ளார்.

MPIC இன் முகநூல் பதிவின்படி, மலேசியா  உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organisation) கீழ் அமந்துள்ள ஒரு முரண்பாடுகள் தீர்வு காணும் வழிமுறையை கையாழ்வதாக அறிவித்துள்ளது.

“விவாத தீர்வு கூட்டம் மே 6 முதல் 15 வரை 10 நாட்கள் நீடிக்கும்,” என்று அது கூறியது.

மலேசியாவிலிருந்து பாமாயில் மற்றும் பாமாயில் அடிப்படையிலான எரிபொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உறுப்பு நாடுகளால் விதிக்கப்பட்ட சில தடை செய்யும் நடவடிக்கைகள் குறித்து 2021 ஜனவரி 15 அன்று ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் லிதுவேனியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மலேசியா கோரியுள்ளதாக அமைச்சகம் கூறியது.

சமீபத்தில்,  அமைச்சர் சுரைடா கமாருடின் தனது அமைச்சகம் மே மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை சந்தித்து கட்டாய தொழிலாளர்கள் மற்றும் பாமாயில் பிரச்சினைகள் பற்றி பேசும் என்று கூறியிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளால் பாமாயிலுக்கு எதிரான பாகுபாடு குறித்து உலக வர்த்தக அமைப்பில் (WTO) மலேசியா கடந்த ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தது.