நீதிபதி மீதான ஊழல் விசாரணை முறையா? என்ற வினாவின் விசாரணை ஜூன்23-இல்

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலிக்கு எதிரான MACC விசாரணை தொடர்பான இரண்டு சட்டக் கேள்விகளை பெடரல் நீதிமன்றத்திற்குக் குறிப்பிடுமாறு இரண்டு வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் விண்ணப்பத்தை ஜூன் 23 அன்று விசாரிக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி நூரின் பதாருதீன் இன்று வழக்கு நிர்வாகத்தின் தேதியை நிர்ணயித்தார்.

முகமட் நஸ்லானுக்கு (மேலே) எதிராக MACC நடத்திய விசாரணை அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கக் கோரி நூர் அய்ன் முஸ்தபா (Nur Ain Mustapa) மற்றும் ஸ்ரீகாந்த் பிள்ளை (Sreekant Pillai) மற்றும் சமூகபோராளி ஹரிஸ் ஃபத்தில்லா முகமது இப்ராஹிம் (Haris Fathillah Mohamed Ibrahim) ஆகிய இரு வழக்கறிஞர்களால் தாக்கல் செய்யப்பட்ட அழைப்பாணை குறிக்கிறது.

முதலாவது கேள்வி, மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 125 (5) பிரிவின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்ட உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் பெடரல் நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்க MACC உள்ளிட்ட குற்றப் புலனாய்வு அமைப்புகளுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளதா என்பதாகும்.

இரண்டாவது கேள்வி, அரசு தரப்பு, அரசமைப்பு விதி 145(3) யின் படி, பணியாற்றும் நீதிபதிகளுக்கு எதிரான குற்றங்களுக்கு ஏதேனும் நடவடிக்கைகளைத் தொடங்குதல் அல்லது நடத்துதல் செய்யும் அதிகாரம் உள்ளதா என்பதாகும்.

இதற்கிடையில், மஸ்லிபா செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ​​​​இந்த வழக்குக்கு பதிலளிக்க பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய பிரதிவாதிகளுக்கு ஜூன் 2 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஜூன் 22 அல்லது அதற்கு முன் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை இரு தரப்பினரும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 6 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், மூன்று வாதிகளும், பணியிடத்தில் இருக்கும் நீதிபதிகள் இடைநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது நீக்கப்பட்டாலோ அவர்களை விசாரிக்க MACC க்கு உரிமை இல்லை என்று அறிவிக்க முயல்கின்றனர்.

நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு எதிரான குற்றத்திற்காக அரசு வழக்கறிஞருக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவோ ​​அல்லது நடத்தவோ அதிகாரம் இல்லை என்றும், நீதிபதி முகமட் நஸ்லானுக்கு எதிரான விசாரணைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அவர்கள் அறிவிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

நீதிபதி மீதான விசாரணை, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அதிகாரங்களைப் பிரிக்கும் கொள்கையின் நிர்வாகக் கிளையின் மீறல் என்று அவர்கள் கூறினர்.

சமீபத்தில், முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் SRC International Sdn Bhd நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டை விசாரித்து  தண்டனை அளித்த  முகமட் நஸ்லான், தனது வங்கிக் கணக்கில் இல்லாதா  பணத்திற்காக விசாரிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட செய்திக் கட்டுரைகள் மீது காவல்துறை அறிக்கை ஒன்றைப் பதிவு செய்தார்.

ஏப்ரல் 21 அன்று பெடரல் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், முகமட் நஸ்லான் ஒரு நீதிபதி என்ற முறையில் தனது நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும் குற்றவியல் நீதி மற்றும் நீதித்துறையின் நிர்வாகத்தை சீர்குலைப்பதையும் நோக்கமாகக் கொண்ட தவறான, ஆதாரமற்ற மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.