இந்தியா பறக்கிறார் ரணில்

இலங்கையில் கடும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் பிரதமராகியிருக்கும் ரணில் விக்ரமசிங்க, முதலில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பொறுப்பேற்ற ரணில், இந்தியாவுடன் நெருங்கிய உறவை விரும்புவதாகவும், இலங்கைக்கு உதவி செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.

இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

இன்றையதினம் பல்வேறு நாடுகளின் தூதுவர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.அதில் இந்திய தூதுவர் கோபால் பாக்லேயும் உள்ளடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

IBC Tamil