உக்ரைன் அகதிகளுக்கு ஒரு நியாயம், ஆப்ரிக்கா அகதிகளுக்கு ஒரு நியாயமா?

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 3வது மாதத்தை எட்டவுள்ளது. இந்த போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவர்களை ஐரோப்பிய நாடுகள் வரவேற்கின்றன. அதே சமயம் ஆப்ரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போர் உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அகதிகள் வந்தால் ஐரோப்பிய நாடுகள் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர்.

இந்நிலையில் அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக சர்வதேச ரெட் கிராஸ் சங்கத்தலைவர் பிராசன்ஸ்கோ ரோக்கா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்:-

நைஜீரியாவில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஐரோப்பாவுக்கு வருகின்றனர். ஆனால் அவர்களை ஐரோப்ப அரசுகள் ஏற்க மறுக்கிறது. யார் வன்முறையில் இருந்து தப்பி வந்தாலும், யார் பாதுகாப்பு தேடி வந்தாலும் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்.

உக்ரைன் விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது நல்ல விஷயம்.

ஆனால் தெற்கு எல்லையில் உள்ள மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு பக்கத்தில் உள்ள ஒரு அணுகுமுறையையும், கிழக்கு எல்லையில் உள்ள உக்ரைனுக்கு ஒரு அணுகுமுறையையும் ஐரோப்பிய நாடுகள் வைத்துள்ளன.

ஒரு உயிரை காப்பாற்றுவதற்கு இனமும், தேசமும் தடையாக இருக்க கூடாது.

அரசாங்கங்கள் சரியான அகதிகள் கொள்கைகளை வைத்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

 

 

Malaimalar