லஞ்சம் கொடுப்பவர்ககளும் லஞ்சம் வாங்குபவர்களும் – வித்தியாசமற்ற குற்றவாளிகள் – முன்னாள் நீதிபதி

ஓய்வுபெற்ற மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மா வெங் குவாய், லஞ்சம் கொடுப்பவர்களும், அதை ஏற்றுக்கொள்பவர்களும் குற்றவாளிதான்  என மக்களுக்கு நினைவூட்டியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான மாநாட்டில் பேசிய , முன்னாள் மலேசிய வழக்கறிஞர் மன்ற  தலைவர் “ஊழல் மேலிருந்து தொடங்குகிறது” என்றார்.

ஊழல் தலைவர்கள் இருக்கும் போது, அவர்களை முன்மாதிரியாகாக் கொண்டு மக்களே ஊழல்வாதிகளாக மாறுவார்கள் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், தலைமையில் உள்ள அமுலாக்க அதிகாரிகள் “நேர்மையும் தூய்மையும் ” கொண்டவர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார்.

“அமுலாக்க அதிகாரிகளுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட வேண்டும், அது அவர்கள் சபலத்திற்கு  பலியாகாமல் இருக்க மனதை பலப்படுதும்,” என்று அவர் கூறினார்.  ஊழல் என்கின்ற “தீது” நம் அனைவரையும் பாதித்ததோடு மற்றும் அல்லாமல், வரும் தலைமுறைகளையும் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகார்களின் தவறுகளை காட்டி கொடுப்பவர்களை  (விசில்ப்ளோவர்)  பாதுகாப்புச் சட்டம் 2010-ஐத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் மா அவர்கள் எடுத்துரைத்தார், தற்போது அவர்கள் அமலாக்க நிறுவனங்களுக்கு மட்டுமே செல்ல முடியும் ஆனால் அவர்கள் நேரடியாக ஊடகங்களைத் தொடர்புகொள்வதையும் உறுதிசெய்ய வேண்டும்.

விசில்ப்ளோயர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு சிறிதும் இடமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

 

FMT