பலமுறை கெஞ்சிய பிள்ளைகள்; நிதானமாக சென்ற காவல்துறை

டெக்­சஸ் துப்­பாக்­கிச் ‌சூட்டுச் சம்­ப­வத்­தின்­போது காவல்­து­றை­யி­னர் உட­ன­டி­யாக வகுப்­பறைக்­குள் செல்­லா­மல் வெளி­யில் காத்­தி­ருந்­தது தவ­றான முடிவு என்று டெக்­சஸ் பொதுப் பாது­காப்­புத் துறை­யின் இயக்­கு­நர் ஸ்டீ­வன் மெக்ரா சொன்­னார்.

துப்­பாக்கிச் சூடு நடந்­து­கொண்­டி­ருந்­த­போது, அங்­கி­ருந்த மாண­வர்­கள் குறைந்­தது ஆறு முறை­யா­வது 911 என்ற அவ­சர உதவி எண்­ணிற்கு அழைத்து உதவி கேட்டுக் கெஞ்­சி­யது தெரிய வந்துள்­ளது.

அதே­ச­ம­யத்­தில் கிட்­டத்­தட்ட 20 அதி­கா­ரி­கள் பள்­ளி­யின் ­கூடத்­தில் கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரம் காத்­தி­ருந்­த­னர்.

18 வயது சல்­வ­டோர் ரமோஸ் என்­ப­வன் நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்­டில் 19 பிள்­ளை­கள், 2 ஆசி­ரி­யர்­கள் கொல்­லப்­பட்­ட­னர்.

துப்­பாக்­கிக்­கா­ரன் உள்ளே தடுத்து வைக்­கப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் பிள்­ளை­கள் ஆபத்­தில் இல்லை என்­றும் உவால்டி மாவட்ட காவல் துறை அதி­காரி நம்­பி­ய­தா­க­வும் அத­னால், போலி­சார் தயா­ராக நேரம் அளிக்­கப்­பட்­ட­தா­க­வும் மெக்ரா தெரிவித்தார்.

“இது தவ­றான முடிவு,” என்­றார் அவர்.

இதற்­கி­டையே பேசிய முன்­னாள் அதி­பர் டிரம்ப், துப்­பாக்­கிச் சட்­டங்­களைக் கடு­மை­யாக்­கு­வ­தற்­கான அழைப்­பு­க­ளை­ நிரா­க­ரித்­தார்.

ஹூஸ்­ட­னில் நடை­பெற்ற தேசிய துப்­பாக்கி சங்­கத்­தின் கூட்­டத்­தில் பேசி­ய­போது அவர் இவ்­வாறு சொன்­னார்.

நல்­ல­வர்­கள் ‘தீமைக்கு’ எதி­ராக தங்­க­ளைத் தற்­காத்­துக்கொள்ள துப்­பாக்­கி­கள் அனு­ம­திக்­கப்­பட வேண்­டும் என்று கூறி­னார்.

மாறாக ஒரே நுழை­வா­யில், ஆயுத­மேந்­திய போலிஸ் அதி­காரி எனப் பள்­ளிக்­கூ­டங்­களில் பாது­காப்­பைப் பலப்­ப­டுத்த வேண்­டும் என்­றார் அவர்.

“உக்­ரே­னுக்கு ராணுவ உதவி செய்­வ­தை­விட, பள்­ளி­களில் பாது­காப்­பைப் பலப்­ப­டுத்த முன்­னு­ரிமை கொடுக்­க­வேண்­டும்,” என்று அர­சி­யல்­வா­தி­களை அவர் சாடி­னார்.

Tamilmurasu