கைரியின் பிரிவுக்கும் பணம் கொடுத்துள்ளோம், விசாரணையில் சாத்தியமளித்த யுகேஎஸ்பி முன்னாள் இயக்குனர்

அல்ட்ரா கிரானா -வின் யுகேஎஸ்பி இன் முன்னாள் இயக்குனர், கைரி ஜமாலுடினின் அம்னோ பிரிவுக்கு தனது நிறுவனமும் பணம் கொடுத்ததாக இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வான் குவோரிஸ் ஷா வான் அப்துல் கானி, ரெம்பாவ் அம்னோ பிரிவுக்கு ரிங்கிட் 50,000 முதல் ரிங்கிட் 200,000 வரை நன்கொடை அளிக்கப்பட்டது ஆனால் நேரடியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ அப்போதைய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராக இருந்த கைரிக்கு வழங்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ரெம்பாவ் பிரிவு துணைத் தலைவராக இருக்கும் கைரி, தற்பொழுது சுகாதார அமைச்சராக உள்ளார்.

முன்னாள் துணைப் பிரதம மந்திரி அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மீதான ஊழல் வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த வான் குவோரிஸ், பங்களிப்புகள் மாதாந்திர அடிப்படையில் வழங்கப்படவில்லை என்றும், பணம் செலுத்துவது குறித்து தான் முடிவு செய்ததாகவும் கூறினார்.

துணை அரசு வழக்கறிஞர் வான் ஷாருடின் வான் லாடினிடம் விசாரணை நடத்தியபோது, ​​”இடைத்தேர்தலின் போது, ​​பேரிடர் நிவாரணம் மற்றும் மனிதாபிமான திட்டங்களுக்கு அவர் தேசியத் தலைவர் என்பதால் பங்களிப்புகளும் செய்யப்பட்டன அன்று அவர் தெரிவித்துள்ளார்.

அம்னோ உறுப்பினரான வான் குவோரிஸ், அந்த நேரத்தில் கைரியும் அம்னோ இளைஞர் தலைவராக இருந்ததால் அந்தப் பிரிவுக்கு பணம் கொடுக்கப்பட்டது என்றார்.

முந்தைய விசாரணையில், “கைரி” மற்றும் “போமோ” யுகேஎஸ்பிக்கு சொந்தமான லெட்ஜரில் காணப்பட்ட வார்த்தைகளில் அடங்கும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் யுகேஎஸ்பி இயக்குநர் ஹாரி லீ வுய் குன், ஜாஹிட்டின் வழக்கறிஞர் அஹ்மத் ஜைதி ஜைனால் குறுக்கு விசாரணையின் போது, ​​பதிவேட்டை அவருக்குப் பரிந்துரைத்தபோது இவ்வாறு கூறினார்.

2014 மற்றும் 2018 க்கு இடையில் பல நபர்களுக்கு நிறுவனம் செலுத்திய பணம் குறித்த விவரங்கள் பதிவேட்டில் இருந்தன.

“கேஜே” என்ற முதலெழுத்துகள் கைரியைக் குறிக்கின்றன என்பதை உறுதிப்படுத்த முடியுமா என்று கேட்டதற்கு,  “அது, எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.” என்று லீ பதிலளித்தார்:

வான் குவோரிஸ் “கே.ஜே. பற்றி நன்றாகத் தெரியும்” என்று அவர் கூறினார்.

இன்று, 16வது அரசுத் தரப்பு சாட்சியான வான் குவோரிஸ், ஜாஹிட், “191 அம்னோ பிரிவுகளில் சிலவற்றிற்கு” அரசியல் நன்கொடையாக யுகேஎஸ்பியிடமிருந்து பணத்தைப் பெற்றதாக நீதிமன்றத்தில் அவர் கூறினார்.

ஜாஹிட் அப்போது உள்துறை அமைச்சராகவும் அம்னோ துணைத் தலைவராகவும் இருந்ததாகவும் “2014 மற்றும் 2018 க்கு இடையில் அவர் எங்களுக்கு உதவிய பிறகு நாங்கள் பணத்தை வழங்கினோம்,” என்று அவர் கூறினார்.

அவரது அமைச்சகம் தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க உதவவில்லை என்றால் யுகேஎஸ்பி ஜாஹித்துக்கு பணம் கொடுத்திருக்காது என்றார் அவர்.

“நான் ஜாஹித்தை எத்தனை முறை சந்தித்தேன் என்பது எனக்கு நினைவில் இல்லை, ஆனால் நான் அவருக்கு 300,000 சிங்கப்பூர் டாலர்களைக் கொடுத்தேன்,” என்று அவர் கூறினார்.

69 வயதான ஜாஹிட், ஒரு அரசு ஊழியர் மற்றும் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்ததன் மூலம் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நீட்டிக்க சீனாவில் உள்ள ஒன்-ஸ்டாப் சென்டர் OSC மற்றும் VLN அமைப்பு, அத்துடன் VLN ஒருங்கிணைந்த அமைப்பு சாதனங்களை அமைச்சகத்தால் அதே நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பராமரிக்கவும் யுகேஎஸ்பிலிருந்து 13.56 மில்லியன் சிங்கப்பூர் டாலர் அதாவது 42 மில்லியன் ரிங்கிட்  லஞ்சம் பெற்றதாக 33 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

மற்ற ஏழு வழக்குகளில், அவர் தனது உத்தியோகபூர்வ வேலை தொடர்பாக அதே நிறுவனத்திடமிருந்து 1,150,000  சிங்கப்பூர் டாலர், 3 மில்லியன் ரிங்கிட், €15,000 மற்றும் 15,௦௦௦ அமெரிக்க டாலர் ரொக்கமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அக்டோபர் 2014 மற்றும் மார்ச் 2018 க்கு இடையில் புத்ராஜெயாவின் பிரசிண்ட் 16, மற்றும் கன்ட்ரி ஹைட்ஸ், கஜாங்கில் உள்ள செரி சத்ரியாவில் அனைத்து குற்றங்களையும் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதி யாசித் முஸ்தபா முன் விசாரணை நடந்து வருகிறது.

FMT