“தோல்வியடைந்த அரசு விலகட்டும் நான் வருகிறேன்” மைத்திரிபால அதிரடி அறிவிப்பு

தற்போதைய அரசாங்கம் தீர்வுகளை வழங்க கூடிய அரசாங்கமாக எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை இதனால் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு தலைமைத்துவத்தை வழங்க நான் தயார் என்றும் முன்னாள் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் முடியுமாக இருக்கும் என்பதுடன் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தோல்வியடைந்த  அரசாங்கம்

அரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையிலான பகைமை ஒரு போட்டியாக மாறி உள்ளது .

நான் அரச தலைவராகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் இருந்த போது காணப்பட்ட அதே நிலைமை தற்போது இருவருக்கும் இடையில் காணப்படுகிறது.

இருவருக்கும் இடையில் ஒருங்கிணைப்பு, புரிந்துணர்வு இல்லை என்பது தெளிவான விடயம் இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய அரசாங்கம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. நாட்டையும் அதன் மக்களையும் புதைகுழிக்குள் விட்டுச் சென்றது.

அரசு தலைவரும் பிரதமரும்  தங்கள் செயல்பாடுகளில்  தோல்வி அடைந்துள்ள போதிலும் ஒருவருக்கொருவர் சவால் விடும் விதத்தில் அவர்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதற்கான போட்டியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற சந்தேகம் தோன்றுகிறது.எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

IBC Tamil