யுகேஎஸ்பி இலிருந்து பணம் பெறவில்லை – கைரி ஜமாலுடின்

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மீதான ஊழல் வழக்கு விசாரணையில் சிக்கியுள்ள அல்ட்ரா கிரானா  யுகேஎஸ்பி என்ற நிறுவனத்திடம் இருந்து நிதி பெற்றதாக கூறப்படுவதை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மறுத்துள்ளார்.

ஒருபோதும் அரசியல் நிதியைப் பெறவில்லை என்று கூறிய கைரி, இந்த வழக்கு தொடர்பான எந்த விசாரணையிலும் அதிகாரிகளுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

“பணமோ அல்லது அரசியல் நிதியோ தனிப்பட்ட முறையில் நான் எதையும் பெற்றதில்லை. அதிகாரிகளால் அழைக்கப்பட்டால் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன், ”என்று அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

“நான் அரசியல் நிதி பெறவில்லை.”

ஜூன் 13 அன்று, யுகேஎஸ்பி இன் முன்னாள் இயக்குனர் ஜாஹிட்டின் ஊழல் வழக்கு விசாரணையில் ஷா அலாம் உயர்நீதிமன்றத்தில் கைரியின் ரெம்பாவ் அம்னோ பிரிவுக்கு தனது நிறுவனம் பணம் வழங்கியதாக தெரிவித்தார்.

ரிங்கிட் 50,000 முதல் 200,000 வரையிலான பங்களிப்புகள் பிரிவுக்கு அளிக்கப்பட்டன, ஆனால் கைரிக்கு நேரடியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ வழங்கப்படவில்லை என்று வான் குவோரிஸ் ஷா வான் அப்துல் கானி கூறினார்.

முன்னாள் பிரதம மந்திரி முகைடின் யாசின், முன்னாள் வெளியுறவு மந்திரி அனிஃபா அமான், வாரிசன் தலைவர் ஷாபி அப்டல், வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி மந்திரி ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன் மற்றும் பாதுகாப்பு மந்திரி ஹிஷாமுடின் ஹுசைன் ஆகியோர் இந்த வழக்கு விசாரணையில் சிக்கியுள்ளனர்.

அனிஃபாவும் முஹ்யிதினும் யுகேஎஸ்பி இலிருந்து எந்தப் பணத்தையும் பெறவில்லை.

FMT