பார்ட்டி பங்சா மலேசியாவில் சேர சுயேச்சை எம்பிக்ககளை அழைக்கிறார் ஜுரைடா

பார்ட்டி பங்சா மலேசியா பிபிஎம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுரைடா கமருடின், புதிதாக உருவாக்கப்பட்ட கட்சியில் இணைய சுயேச்சை எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சரவாக்கின் இரண்டு சுயேச்சை எம்.பி.க்கள் – மசிர் குஜாட்ஸ்ரீ அமன் மற்றும் ஜுகா முயாங் லுபோக் அன்டு – பிபிஎம்-க்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக வதந்திகள்  பரவியது.

மசீர் முன்பு பார்ட்டி சரவாக் பெர்சத்து பிஎஸ்பி உடன் இருந்தார் மற்றும் ஜுகா பிகேஆர் உறுப்பினராக இருந்தார்.

“அவர்கள் சுயேச்சை எம்.பி.க்கள் ஆதலால் எனது கட்சியில் சேர்ந்தால் , இன்னும் சிறப்பாக இருக்கும்” என்று நேற்றிரவு ஒரு நிகழ்வை நடத்திய பிறகு ஜூரைடா கூறினார்.

“லுபோக் அன்டு மற்றும் ஸ்ரீ அமன் ஜுகா மற்றும் மாசிர் ஆகியோருக்கும் இதே நிலைதான், அவர்கள் என்னுடன் சேர்ந்து எனது குழுவை  வலுப்படுத்த  அவர்களை வரவேற்கிறேன்.” என்றார்.

பிபிஎம்மில் இப்போது மூன்று எம்.பி.க்கள் உள்ளனர் – ஜுரைடா (அம்பாங்), லாரி ஸ்ங் (ஜூலாவ்) மற்றும் ஸ்டீவன் சூங் (டெப்ராவ்).

டிசம்பரில் உருவாக்கப்பட்ட பிபிஎம், சபா மற்றும் லாபுவானில் உள்ள 26 பிரிவுகள் உட்பட நாடு முழுவதும் 190 பிரிவுகளைக் கொண்டுள்ளது என்று ஜுரைடா கூறினார்.

சபா பிபிஎம் தலைவர் முன்னாள் மாநில பிகேஆர் பெண்களின் தலைவர் ரஹிமா மஜித் ஆவார்.

தோட்டத்துறை   மற்றும் மூலப்பொருட்கள் அமைச்சராகவும் இருக்கும் ஜுரைடா, மே 26 அன்று பெர்சத்துவில் இருந்து விலகி பிபிஎம்இல் இணைந்தார் மற்றும் அமைச்சரவையில் அவரது எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.

 

 

FMT