ஒராங் அஸ்லி துயரங்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர அன்வார் உறுதியளித்தார்

PKR தலைவர் அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இவர்களின் அவலநிலையை எழுப்புவதாக ஒராங் அஸ்லி ஆர்வலர்களின்  குழுவுக்கு உறுதியளித்துள்ளார்

பேரா, குவா முசாங், தப்பா, தஞ்சோங் மாலிம் மற்றும் உலு  சிலாங்கூர்(Bera, Gua Musang, Tapah, Tanjung Malim, Hulu Selangor) ஆகிய இடங்களில் இருந்து ஓராங் அஸ்லி மக்கள் அடங்கிய குழுவின் வருகையைத் தொடர்ந்து இது நடந்தது

அவர்களுடன் முன்னாள் செனட்டர் மனோலன் முகமட், ஒராங் அஸ்லி ஆர்வலர் மற்றும் PKR உறுப்பினரும் இருந்தனர்.

PKR தலைவர் அன்வார் இப்ராகிம் ஒராங் அஸ்லி குழுவை சந்தித்தார்

“அவர்கள் எதிர்கொண்ட தீராத பிரச்சினைகள், குறிப்பாக நிலம் (உடைமை), அவர்களின் உரிமைகள், கல்வியின் தரம், வளர்ச்சி இல்லாமை மற்றும் அவர்களின் கிராமங்களில் எதிர்கொள்ளும் பதிவு பிரச்சினைகள் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் என்னிடம் கூறினார்கள்”.

“சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகும், இவர்கள் மிகவும் அடிப்படையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், இவர்கள் மலேசியர்களாக இருந்தாலும் ஓரங்கட்டப்படுவதற்கு காரணமாகிறது.

நாடாளுமன்றத்தில் மற்ற MP க்களுடன் சேர்ந்து, அவர்கள் முன்வைத்த கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்யப்போவதாக  அன்வார் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.

மனோலன் பஹாங்கின் பேராவைச் சேர்ந்த ஒராங் அஸ்லி ஆவார். பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் போது அவர் செனட்டராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 2021 இல் முடிவடைந்தது.

நாடாளுமன்றம் இந்த ஆண்டின் இரண்டாவது கூட்டத்தை ஜூலை 18 அன்று நடத்த உள்ளது.