அமெரிக்காவில் தெலுங்கானா என்ஜினீயர் சுட்டுக்கொலை

பட்டப்பகலில் காரில் வந்தவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்வதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியை சேர்ந்தவர் சாய்சரண் (வயது 24). இவருடைய தந்தை ஓய்வுபெற்ற ஆசிரியர். சாய்சரண் அமெரிக்காவில் மேரிலேண்ட் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக கடந்த 2½ ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.

அதே நிறுவனத்தில் அவருடன் தங்கி வேலை செய்யும் நண்பரை விமான நிலையத்தில் காரில் அழைத்துச் சென்றார். பின்னர் அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் காரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரது காரை வழிமறித்த 2 மர்மநபர்கள் அவரது நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து சுட்டனர்.

இதில் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பட்டப்பகலில் காரில் வந்தவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்வதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாய்சரனை சுட்டுக்கொன்றவர்கள் யார் எதற்காக சுட்டுக் கொன்றனர். முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா என்ஜினியர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Maliamalar