விலைவாசி உயர்வு: ‘மக்கள் ஆர்பாட்டம்’ இல்லாமல், அரசு அசையாது

எந்த அழுத்தமும் இன்றி நாட்டை ஆட்சி செய்ய விடப்பட்டுள்ள அரசாங்கம் மக்களின் நலனுக்காக செயற்படாது என, அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட PKR இளைஞர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

குழுவின் செய்தித் தொடர்பாளர் டேனிஷ் கைருடின் கூறுகையில் , கிள்ளான், காப்பார் மற்றும் கோத்தா ராஜாவைச் சேர்ந்த சுமார் 12 PKR உறுப்பினர்களை உள்ளடக்கிய திடீர் மறியல், விலைவாசி உயர்வைச் சமாளிக்க அரசாங்கத்தின் இயலாமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

“இது சிலாங்கூரில் எங்களின் முதல் ஃப்ளாஷ்மாப் . நேற்று பினாங்கில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தற்போதைய முன்னேற்றங்கள் குறித்துப் பேச பொதுமக்களை ஊக்குவிக்கவும் ஒரு ஃப்ளாஷ்மாப் நடந்தது.

“மக்கள் பெரும் சிரமத்தில் இருக்கும்போது இந்த அலை மேலும் நகரும் என்று நான் நம்புகிறேன்”.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜார்ஜின் அரசியல் செயலாளரான டேனிஷ், “இதை நாம் மக்களிடமிருந்து நேர்மறையான அழுத்தமாகப் பார்க்க வேண்டும். அழுத்தம் இல்லாமல், அரசாங்கம் எப்போதும் மெத்தனமாக இருக்கும்” என்றார்.

ஜொகூர் DAP துணைத் தலைவர் ஷேக் உமர் அலி ஒரு பெரிய அளவிலான தெருப் பேரணிக்கு அழைப்பு விடுத்த சில நாட்களுக்குப் பிறகு இன்றைய ஃப்ளாஷ்மொப் நடைபெற்றது, பின்னர் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் கண்டனங்களைப் பெற்றது.

போராட்டத்திற்கான தனது அழைப்பில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கையாள்வதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று ஷேக் உமர் கூறினார்.

அரசியல் விளையாட்டை நிறுத்துங்கள்

கிள்ளான் PKR இளைஞரணித் தலைவர் முகமட் ஷஹரில் அட்னான், பதவிகள் தொடர்பாக அம்னோவிற்கும் பெர்சத்துவிற்கும் உள்ள சலசலப்புகளை மேற்கோள் காட்டி, அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் தங்கள் உள் அரசியலை நிறுத்திவிட்டு மக்களுக்கு சேவை செய்யுமாறு வலியுறுத்தினார்.

“அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நடவடிக்கைகளில் மும்முரமாக இருக்கும்போது மக்கள் தங்கள் உணவை பெற சிரமப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, கிள்ளான் நகர சபையின் நடைபாதையில் குழு ஒன்று கூடியது, அங்கு ஜூலை 1 முதல் மானியங்கள் திரும்பப் பெறப்பட்டதால் பாதிக்கப்பட்ட கோழி மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வைச் சமாளிக்க அரசாங்கம் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கோசங்களை எழுப்பினர்.

கிள்ளான் செலத்தான்  மாவட்ட காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு டஜனுக்கும் மேற்பட்ட காவலர்களின் நெருக்கமான கண்காணிப்பின் கீழ் நண்பகல் வாக்கில் ஃப்ளாஷ்மோப் அமைதியாக முடிந்தது.