தேர்தலில் வெற்றி பெற திட்டங்களை வகுக்கும் பசில்

ஒரு வருடகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தெரிவருகிறது.

பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்த ஜனாதிபதி

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு அண்மையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

திட்டங்களை வகுக்கும் பசில்

இதனிடையே தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, தனது கட்சியை மறுசீரமைத்து எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற திட்டங்களை வகுத்து வருகிறார்.

இரட்டை குடியுரிமையாளரான பசில் ராஜபக்ச தற்போது ஓய்வெடுப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதுடன் மீண்டும் இலங்கை திரும்பவுள்ளார்.

இதன் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்களை அழைத்து கட்சியின் மறுசீரமைப்பு, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்த பசில் தீர்மானித்துள்ளார்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிவாரி முறையிலேயே எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது.

 

Tamilwin